பாஸ்போர்ட் இல்லாமல் துபாயில் வாடும் நெல்லை இளைஞர்கள்
நெல்லை: துபாயில் கட்டுமான பணிக்காக சென்ற ராதாபுரத்தை சேர்ந்த 3 பேர் பாஸ்போர்ட் இல்லாததால் ஊர் திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். இதனால் இவர்களது குடும்பங்கள் கண்ணீரில் மூழ்கியுள்ளன.
ராதாபுரத்தை சேர்ந்த அந்தோணி முத்து, தங்கராஜ், கண்ணன். இவர்கள் மூவரும் கட்டுமான வேலைக்காக கடந்த 96ம் ஆண்டு துபாய் சென்றனர். அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். அங்கு கடந்த 10 மாதங்களாக மூவருக்கும் ஊதியம் வழங்கப்படவில்லை. அவர்களது பாஸ்போர்ட்டையும் வேலைக்கு அமர்த்திய நிறுவனம் பறித்து கொண்டது.
பாஸ்போர்ட் இல்லாததால் மூவரும் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல், விசா இல்லாததால் துபாயில் எங்கும் செல்லமுடியாத நிலையில் உள்ளனர்.
தூபாயில் பசி,பட்டினி, இடமின்றி வாடும் மூவரையும் மீட்டு தர வேண்டுமேன அந்தோணி முத்துவின் தாய் வேலம்மாள், தங்ராஜின் மனைவி தங்கசுகந்தி ஆகியோர் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.












Click it and Unblock the Notifications