அமெரிக்காவில் விமான விபத்து-2 பெங்களூர் தமிழ் சகோதரர்கள் பலி

பெங்களூரைச் சேர்ந்த அளஞ்சியம் கலைச்செல்வன் கிங்பிஷர் விமான நிறுவனத்தில் பைலட்டாக பணியாற்றி வருகிறார். இவரது மகன் கார்த்திக் கலைச்செல்வன் (22) அமெரிக்காவில் விமானப் பைலட் பயிற்சியை முடித்துவிட்டு டெஸ்ஸாஸ் அருகே ஆர்லிங்டனில் உள்ள ஸ்கைமேட்ஸ் பிள்டை ஸ்கூல் விமானப் பயி்ற்சி மையத்தில் பயிற்சியாளராக பணியாற்றி வந்தார்.
கார்த்திக்கின் தம்பி பிரதிக் கலைச்செல்வன் (19) சென்னையில் பல் மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தார்.
சமீபத்தில் பிரதிக் தனது சகோதரரை காண அமெரிக்கா சென்றிருந்தார். கடந்த 13ம் தேதி இருவரும் ஸ்டீபன்வில்லே என்ற இடத்தில் உள்ள ஹார்ட்-எய்ட் பிபிக்யூ என்ற மிகப் பிரபலமான ஹோட்டலில் டின்னருக்காக சிறிய விமானத்தில் சென்றனர்.
கேசே பிரினேகர் (26) என்பவர் இந்த விமானத்தை ஓட்டிச் சென்றார். இவர் கார்த்திக்குடன் விமான நிறுவனத்தில் விமான பயிற்சியாளராக பணியாற்றி வந்தார்.
ஸ்டீபன்வில்லாவிலிருந்து திரும்பி வந்தபோது, டெக்ஸாஸ் ஹூட் கவுன்டி அருகே இவர்கள் வந்த பீச்கிராப்ட் பொனான்ஸா சி-33 ரக சிறிய விமானம் விழுந்து நொறுங்கியது.
இதில் பிரினேகர் மற்றும் கார்த்திக் இருவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த பிரதீக் ஹெலிகாப்டர் மூலம் போர்ட்வோர்த்தில் உள்ள ஜான் பீட்டர் ஸ்மித் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விபத்து நடந்தபோது பிரினேகர் தான் விமானத்தை இயக்கினாரா என்பது உறுதியாகவிலலை என டெக்ஸாஸ் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து கார்த்திக், பிரதீக்கின் பெற்றோர் டெக்ஸாஸ் விரைந்துள்ளனர். பலியான சகோதரர்களின் உடல்களை பெங்களூருக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விமான விபத்துக்குள்ளானது ஏன் என்று தெரியவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications