இந்தியாவிலிருந்து எந்தத் தூதரும் வரத் தேவையில்லை: இலங்கை அமைச்சர் பேச்சு
Subscribe to Oneindia Tamil

தமிழர் மறு நிவாரணப் பணிகளில் இலங்கை அரசு சரிவர செயல்படாமல் உள்ளது. எனவே அங்கு சிறப்புத் தூதரை அனுப்பி உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அழகப்பெருமா மூலம் இலங்கை பதிலளித்துள்ளது. இதுகுறித்து அழகப்பெருமா கூறுகையில்,
இலங்கைக்கும், இந்தியாவுக்கும் சிறந்த புரிந்துணர்வும், உறவும் உள்ளது. மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில்கூட இந்தியா இலங்கைக்கு எவ்வித அழுத்தங்களையும் கொடுக்கவில்லை. இந்தியாவுடனான உறவு உலகில் வேறு எந்த நாடுகளுக்கும் இடையே உள்ள உறவை விட சிறந்ததாகும்.
தமிழ் மக்களின் மறுகுடியமர்வு தொடர்பாக அரசு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. எனவே இலங்கை நிலைமை தொடர்பாக ஆராய இந்தியாவிலிருந்து சிறப்புத்தூதரை அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளார் அழகப்பெருமா.












Click it and Unblock the Notifications