தென்காசி வங்கி ஊழியரின் 5 வயது மகன் படுகொலை
Subscribe to Oneindia Tamil
தென்காசி: செண்பக விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சிட்டிபாபு. இவர் தென்காசியில் உள்ள ஒரு வங்கியில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் கணேசன். இவனுக்கு லேசாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் இருந்து சிறுவன் கணேசனை காணவில்லை. பெற்றோர் அவனை பல இடங்களில் தேடினர். இதுகுறித்து போலீசிலும் புகார் செய்தனர்.
இந்நிலையில் நேற்று காலை தென்காசி கன்னிமாரம்மன் கோவில் தெருவில் கழிவு நீர் ஓடையில் சிறுவன் கணேசன் பிணமாக கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றினர். கணேசனின் தலையில் காயங்கள் இருந்தன.
அவன் மீது கற்கள் நிரப்பிய சாக்கு மூட்டை கிடந்தது. மர்ம நபர்கள் கணேசனை கல்லால் தாக்கி கொலை செய்து ஓடையில் வீசியிருக்கலாம் என்றும், வெளியில் தெரியாமல் இருக்க சாக்குமூட்டையை உடல் மேல் வைத்திருக்க வேண்டும் எனவும் போலீசார் கருதுகின்றனர்.
நரபலி கொடுப்பதற்காக சிறுவனை யாராவது கடத்தி கொலை செய்தார்களா, என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தென்காசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்













Click it and Unblock the Notifications