பாத்ரூம் போன காட்சியை படம் பிடித்து பெண்ணை மிரட்டியவர் கைது
சென்னை: ஏற்கனவே திருமணம் ஆகியும், அலுவலகத்தில் தன்னுடன் வேலை பார்க்கும் சக பெண் அதிகாரியை கட்டாய திருமணம் செய்ய முயன்ற, அவரை அடைவதற்காக செல்போனில் அவர் பாத்ரூம் போனதை படம் பிடித்து வைத்து மிரட்டி வந்த தனியார் நிறுவன மானேஜர் கைது செய்யப்பட்டார்.
சென்னை மண்ணடி பவளக்கார தெருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மானேஜராக பணிபுரிந்தவர் சுரேஷ்( 43). இவருக்கு திருமணமாகி 19 வயதில் ஒரு மகளும் இருக்கிறார். ஆனால் தனக்கு கீழ் வேலை பார்த்த ராதா என்ற அதிகாரி மீது சுரேஷுக்கு காதல் ஏற்பட்டது. ஆனால் அதை ராதா ஏற்கவில்லை. நிராகரித்து விட்டார்.
ஆனாலும் விடாத சுரேஷ், ராதாவை அடைய கடுமையாக முயன்றுள்ளார். அவரை பலாத்காரம் செய்யவும் முயன்றுள்ளார். இதையடுத்து ராதா பாத்ரூமுக்குப் போகும்போது அதை தனது செல்போனில் படம் பிடித்து வைத்துக் கொண்டு மிரட்ட ஆரம்பித்தார் சுரேஷ். இதற்கும் ராதா மசியவில்லை.
வெறி பிடித்தவர் போல சுரேஷ் நடந்து வந்ததால் வேலையை விட்டு விலகினார் ராதா. ஆனாலும் சுரேஷின் காமவெறி அடங்கவில்லை. அவரது வீட்டிற்கே சென்று தன்னைக் கல்யாணம் செய்து கொள்ளுமாறு மிரட்ட ஆரம்பித்தார். அவரது பெற்றோரையும் மிரட்டியுள்ளார்.
இதற்கு மேலும் பொறுமை காக்க விரும்பாத ராதா, போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் சுரேஷைக் கைது செய்தனர். காவல் நிலையத்தில் வைத்து அவரது மனைவி, மகளை அழைத்து சுரேஷிடம் பேச வைத்தனர். அவர்களிடமே, நான் ராதாவை அடையாமல் விட மாட்டேன் என்று பிடிவாதமாக சுரேஷ் கூறினார்.
இதையடுத்து சுரேஷ் மீது வழக்குப் பதிவு செய்து கோர்ட்டில் நிறுத்தி சிறைக்கு அனுப்பினர் போலீஸார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications