2 நேபாள பெண்களை கடத்திய இந்தியர்கள்-மீட்க முடியாமல் திணறல்
காத்மாண்டு : இந்திய எல்லையோரம் உள்ள தெற்கு நேபாளில் உள்ளது கன்சன்பூர் மாவட்டம். இந்த மாவட்டத்தை சேர்ந்த மீட்பு படையினர் இந்திய குடியுரிமை உள்ளவர்களால் கடந்த 26 நாட்களாக பணயக்கைதிகளாக வைக்கப்பட்டிருக்கும் 2 நேபாள பெண்களை மீட்க முடியாமல் வெறுங்கையுடன் திரும்பி உள்ளனர்.
இந்த குழுவில் ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு, உரிமை போராளிகள் மற்றும் உள்ளூர் இளைஞர்கள் அடக்கம். இந்திய அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்காததால் அவர்கள் கன்சன்பூருக்கே திரும்பிவிட்டனர்.
மாயா குமாரி பி.கே.(14) மற்றும் கந்தி குமாரி தமாய்(15) ஆகிய அந்தப் பெண்கள் நேபாளத்திலிருந்து கடத்தப்பட்டு இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டனர். இந்தியர்களான அஜய் பஞ்சராவும், ரமேஷ் பஞ்சராவும் சேர்ந்து அந்த பெண்களை உத்தர பிரதேசம், பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள அம்ரித்பூருக்கு கொண்டு சென்றதாக அந்த பெண்களின் குடும்பத்தார் தெரிவித்தனர்.
அவர்கள் இங்கு வந்ததில் இருந்து பஹதூர் பாரதி என்ற டாக்டரின் வீட்டில் பூட்டி வைக்கப்பட்டுள்ளனர்.
கன்சன்பூர் மாவட்ட தலைமை அதிகாரி அந்த பெண்களை பத்திரமாக மீட்டுத் தருவதாக அவர்களின் குடும்பத்தாருக்கு உறுதி அளித்துள்ளார். மேலும், அவர்களை மீட்பது தொடர்பாக இந்திய அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
அந்த பெண்களின் குடும்பத்தார் தங்கள் பிள்ளைகளை மீட்டுத் தரும்படி உயர் அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்திய-நேபாள எல்லையை ஒட்டிய சுமார் 1,800 கிலோ மீட்டர் தொலைவில் கள்ளக்கடத்தல், ஆள் கடத்தல் போன்ற குற்றங்கள் பெருமளவில் நடப்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications