சென்னையில் சிறுவன் கொலை-நாகையில் சூட்கேஸில் வைத்து வீசப்பட்ட கொடுமை
சென்னை: சென்னையைச் சேர்ந்த சிறுவன் கொலை செய்யப்பட்டு அவனது உடலை சூட்கேஸில் வைத்து நாகை பஸ் நிலையத்தில் போட்டுச் சென்றுளளது ஒரு கொடூரக் கும்பல்.
நாகப்பட்டினம் பேருந்து நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 1 மணி முதல் ஒரு சூட்கேஸ் எடுப்பார் இன்றி கிடந்துள்ளது. வெகு நேரத்திற்கு பிறகு அந்த சூட்கேஸில் ஈ மொய்த்ததை பார்த்த கடைக்காரர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் கிடைத்து வந்த போலீசார் சூட்கேஸை கிழித்து பார்த்த போது 4 வயது மதிக்க தக்க சிறுவன் ஒருவனின் சடலம் இருந்தது. அந்த சிறுவனை யாரோ கழுத்தை நெறித்து கொன்று, முகத்தை பாலீத்தின் பைகளால் இருக்கக் கட்டியுள்ளனர்.
நேற்று போலீசார், நீல நிற டீ சர்ட்டு போட்டுள்ள 4 வயது மதிக்க தக்க அழகான சிறுவனின் சடலம் கிடைத்துள்ளதாக அனைத்து பத்திரிகைகளிலும் விளம்பரம் கொடுத்தனர்.
இந்த விளம்பரத்தைப் பார்த்த சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் ஜெயக்குமார் என்பவரின் மனைவி ஆனந்தி நாகப்பட்டிணத்திற்கு வந்தார்.
சிறுவனின் சடலத்தை பார்த்த அவர் அது தனது பிள்ளைதான் என்பதை அடையாளம் காட்டினார். பின்னர் அதிர்ச்சியில் மூர்ச்சையானார்.
அவரை மயக்கம் தெளிய வைத்து விசாரித்தபோது,
எனது கணவரின் தோழி பூவரசி. அவர் வேப்பேரியில் இருக்கும் ஒய்.டபுள்யூ.சி.ஏ. விடுதியில் தங்கி பஜாஜ் இன்சூரன்சில் வேலை பார்க்கிறார். தனது விடுதியில் ஏதோ விழா என்று கூறி என் மகன் ஆதித்யாவை அழைத்து சென்றார். மாலை ஆகியும் என் மகனை வீட்டிற்கு கொண்டு வந்து விடவில்லை.
அதனால், பூவரசியின் செல்லுக்கு போன் செய்த போது சுவிட்ச் ஆப் என்று வந்தது. அவர் தங்கி இருந்த விடுதிக்கு சென்று பார்த்த போது, அவர் மருத்துவமனையில் இருப்பதாக சொன்னார்கள்.
மருத்துவமனைக்கு சென்றால், பூவரசி சென்னை ஐகோர்ட் அருகில் உள்ள கோவில் வழியாக வருகையில் தான் மயங்கி விட்டதாகவும், ஆதித்யா பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என்றும் கூறினார்.
இது குறித்து போலீசில் புகார் கொடுக்க சென்ற போது தான் நாகையில் ஒரு சிறுவனின் சடலம் கிடைத்துள்ளது என்றார்கள். அதை கேட்டு இங்கு ஓடி வந்தால் அது என் மகனின் சடலம் தான் என்பது தெரியவந்தது என்று அவர் கூறினார்.
இந்த சம்பவத்தால் சென்னையில் இருந்து நாகை வரை பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனந்தியின் புகாரின் பேரில் போலீசார் பூவரசியை கைது செய்து, தீவிர விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றனர். சிறுவனின் தந்தைக்கு இதில் சம்மந்தம் இருக்குமோ என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications