இலங்கைத் தமிழர்களுக்கு எந்தச் சூழலிலும் உறுதுணையாக இருப்போம்: கருணாநிதி

இந்தியாவிற்கு வந்துள்ள இலங்கைத் தமிழ் எம்.பி.க்களான சம்பந்தன், சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேம சந்திரன், சுமந்திரன் ஆகியோர் முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.
முதல்வர் கருணாநிதியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் சம்பந்தன் பேசுகையில்,
இலங்கையில் வாழும் தமிழர்களை அவரவர் சொந்த ஊர்களில் குடி வைக்கும் பணி தொடங்கியுள்ளது. இதில் உள்ள சிக்கல் குறித்து முதல்வரிடம் கூறினோம்.
இந்தியா என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதை பொருத்து தான் மற்ற நாடுகளும் நடவடிக்கை எடுக்கும். ஆகையால், நாங்கள் இந்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்து இலங்கையில் உள்ள நிலவரத்தை பற்றி எடுத்துரைத்தோம்.
தமிழக முதல்வரை சந்தித்தபோது, இலங்கைத் தமிழர்களுக்கு எந்தச் சூழலிலும் உறுதுணையாக இருப்போம், அவர்களை ஒரு போதும் கைவிட மாட்டோம் என்று அவர் வாக்குறுதி அளித்தார்.
முதல்வர் கருணாநிதியுடன் நடந்த பேச்சுவார்த்தை திருப்தி அளிக்கிறது. போருக்கு பிறகு இலங்கை தமிழர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். உரிய நடவடிக்கை எடுக்க இலங்கை அரசு தவறி விட்டது. வன்னிப் பகுதியில் மீண்டும் ராணுவ மயமாக்கல்தான் நடைபெறுகிறது. இலங்கைத் தமிழர்களை சிறுபாண்மையினராக்க ராஜபக்சே அரசு முயற்சி செய்கிறது.
இலங்கைக்கு சிறப்பு பிரதிநிதியை அனுப்ப வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். இந்த கோரிக்கையை நாங்கள் வரவேற்கிறோம். இந்த கோரிக்கையை இந்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications