பாளையங்கோட்டை சிறைக்குள் செல்போன் தகராறு: 3 பேர் மீது வழக்கு
நெல்லை: பாளையங்கோட்டை மத்திய சிறையில் செல்போன் கேட்டு தண்டனை கைதியின் முதுகில் கம்பியால் தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் மீனவர் காலனியை சேர்ந்தவர் ஜான் பிரிட்டோ. இவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தண்டனை கைதியாக உள்ளார். இவரிடம் செல்போன் இருப்பதாக அதே பிளாக்கில் உள்ள சில கைதிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து ஆம்பூரை சேர்ந்த மூக்காண்டி, பாளையங்கோட்டை புதுபேட்டை தெருவை சேர்ந்த சிவா, கரையிருப்பை சேர்ந்த தங்க கணபதி ஆகிய 3 கைதிகளும் அவரிடம் செல்போன் கேட்டு நச்சரித்துள்ளனர்.
தன்னிடம் செல்போன் எதுவும் இல்லை என ஜான் பிரிட்டோ தெரிவித்துள்ளார். இதனால் கோபம் அடைந்த 3 கைதிகளும் ஜான் பிரிட்டோவின் முதுகில் கம்பியால் தாக்கியுள்ளனர். காயமடைந்த அவருக்கு சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கம்பியால் கைதியை தாக்கிய 3 பேர் மீதும் பெருமாள்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications