''கையி்ல் தட்டு தந்திருந்தால் பூட்டை உடைத்துக் கொண்டு நாயுடு ஓடியிருப்பார்''-பால் தாக்கரே

Subscribe to Oneindia Tamil

Bal Thakare
மும்பை: சந்திரபாபு நாயுடு விவகாரத்தில் மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவான் மென்மையாக நடந்து கொண்டதாக சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் உங்களுக்கு மருமகனா? அல்லது தொழில் பார்ட்னரா என்றும் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்

சிவசேனா கட்சிப் பத்திரிகையான சாம்னாவில் தாக்கரே எழுதியுள்ள கட்டுரையில்,

மகாராஷ்டிர அணையை தனது மாநிலத்துக்கு சொந்தம் கொண்டாடிக் கொண்டு நாயுடு மற்றும் அவரது ஆதரவாளர்கள் நமது மாநிலத்துக்குள் நுழைந்து கலாட்டா செய்துள்ளனர்.

ஆனால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை மகாராஷ்டிர அரசு எடுக்கவில்லை.

அவர்களை ஒளரங்காபாத் சிறைக்கு மாற்றும் முன், நாயுடுவுக்கு சிறைக் கைதிகளுக்கான உடையை அணிவித்து அவர் கையில் சாப்பாட்டு தட்டையும், தண்ணீர் டம்ளரையும் கொடுத்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், முதல் நாளே பூட்டை உடைத்துக் கொண்டாவது சிறையை விடடு நாயுடு ஓடிப் போயிருப்பார்.

ஆனால், நாயுடுவின் தந்திரமான செயல்களுக்கு அரசு அடிபணிந்து விட்டது. அவர்களுக்கு குளிர்சாதன வசதியுடன் கூடிய வாகனங்கள், தங்கும் இடங்கள் வழங்கப்பட்டன. இதற்கு என்ன காரணம்?.

நாயுடு தன்னுடைய மருமகனா அல்லது தொழிலில் பார்ட்னரா என்பதை மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவான் விளக்க வேண்டும்.

ஆந்திராவில் நடக்கும் ஜெகன்மோகன் ரெட்டியின் யாத்திரையால் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள சறுக்கலை மறைக்கவும், மக்களை திசை திருப்பவும் தான் மகாராஷ்டிர காங்கிரஸ் அரசு, நாயுடுவை உள்ளே நுழைய அனுமதித்துள்ளது.

ஆந்திராவில் ஜெகனுக்கு கிடைத்துவரும் ஆதரவை முடக்கவும், அந்த மாநில காங்கிரஸ் அரசுக்கு ஏற்பட்டுள்ள சறுக்கலை மறைக்கவும் நாயுடு விவகாரத்தை மகாராஷ்டிர காங்கிரஸ் அரசு பயன்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார் தாக்கரே.

160 பேருக்கு ஒரே கழிப்பறை:

ஆனால், நேற்றிரவு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த நாயுடு, என்னையும் என்னுடன் வந்த 160 பேரையும் முதலில் ஒரு சிறிய அறையில் அடைத்தனர். அங்கு ஒரே ஒரு கழிப்பறை தான் இருந்தது. அதை சுத்தப்படுத்தக் கூட இல்லை.

பினனர் 9 மணி நேரம் வேன்களில் அடைத்து ஒளரங்காபாத் சிறைக்கு அழைத்துச் சென்றனர். அந்த 9 மணி நேரமும் குடிக்க தண்ணீர் கூட தரவில்லை, சாப்பாடு கூட தரவில்லை. உடல் நலம் பாதிக்கப்பட்ட என் எம்எல்ஏக்களுக்கு
மருந்து, மாத்திரை கூட தராமல் கொடுமைப்படுத்தினர் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+