மெட்ரிக் பள்ளிகளில் தமிழை கட்டாயமாக்க வேண்டும்-ஜெயேந்திரர்
காஞ்சிபுரம்: தாய்மொழியை படிக்காத மாணவர்கள் கல்லூரிக்கு வரும்போது அவர்கள் கல்லூரி மாணவர்களாக இருக்க மாட்டார்கள். கல்லெறி மாணவர்களாகத்தான் இருப்பார்கள். இதனால் தமிழகத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளிகளிலும் தமிழை கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் கூறியுள்ளார்.
ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி விழாவில் அவர் பேசுகையில்,
கல்லூரிகளில் தமிழை ஒரு பாடமாக கட்டாயம் படிக்க வேண்டும் என்று கூறுகின்றனர். பல மெட்ரிக் பள்ளிகளில் தமிழே படிக்காமல் மாணவர்கள் படித்து விட்டு வருகின்றனர்.
இவர்கள் கல்லூரிக்கு வந்து எப்படி தமிழ் படிப்பார்கள்?.
இதனால் மெட்ரிக் பள்ளிகளிலும் தமிழை ஒரு பாடமாக படிக்க உத்தரவிட வேண்டும். அப்போதுதான் அவர்கள் கல்லூரிக்கு வரும்போது தமிழை படிப்பது எளிதாக இருக்கும்.
மற்ற மாநிலங்களில் மாணவ, மாணவிகள் அவரவர் தாய்மொழியை ஒரு பாடமாக படிக்கின்றனர். தமிழகத்திலும் அதேபோல உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
தாய்மொழியை படிக்காத மாணவர்கள் கல்லூரிக்கு வரும்போது அவர்கள் கல்லூரி மாணவர்களாக இருக்க மாட்டார்கள். கல்லெறி மாணவர்களாகத்தான் இருப்பார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications