போலி மதிப்பெண் பட்டியல்-தேர்வுத் துறை அதிகாரிகளுக்கும் தொடர்பு-திருவேங்கடம் தகவல்

என்ஜீனியரிங் மற்றும் மருத்துவப் படிப்புக்கான கவுன்சிலிங்கின்போது, போலி மதிப்பெண் பட்டியலை மாணவர்கள் பலர் தாக்கல் செய்தது தெரிய வந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இரு படிப்புகளிலும் மொத்தம் 51 பேர் போலி மதிப்பெண் பட்டியலை தாக்கல் செய்திருந்தனர். இவர்களில் 10 பேர் மருத்துவப் படிப்பில் சேர வந்தவர்கள்.
இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி கொடுத்த புகார் அடிப்படையில், கூடுதல் போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா உத்தரவின் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்கள். துணை கமிஷனர் ஸ்ரீதர், கூடுதல் துணை கமிஷனர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் தலைமையின்கீழ் இந்த விசாரணை நடைபெற்றது.
முதல்கட்டமாக மருத்துவ கவுன்சிலிங்கின்போது போலி மதிப்பெண் பட்டியலை தாக்கல் செய்த 10 மாணவ-மாணவிகளிடம் விசாரணை நடைபெற்றது.
இதன் அடிப்படையில் மோசடியாக மதிப்பெண் பட்டியலைத் தயாரித்த திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிபாளையத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற உதவி தலைமை ஆசிரியர் திருவேங்கடம் (59) என்பவரும், இவருக்கு ஏஜெண்டாக செயல்பட்ட சென்னை கல்லூரி இயக்குநரக ரெக்கார்ட் கிளார்க் ஏகாம்பரம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நீதிமன்ற காவலில் அவர்கள் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் மேலும் விசாரணை நடத்துவதற்காக உதவி தலைமை ஆசிரியர் திருவேங்கடத்தை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் எழும்பூர் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். திருவேங்கடத்தை 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க எழும்பூர் கோர்ட் நேற்று அனுமதி வழங்கியது. உடனடியாக திருவேங்கடத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தங்கள் அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
அதிகாரிகளுக்குத் தொடர்பு
திருவேங்கடத்திடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது பல திடுக்கிடும் தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார்.
தேர்வுத்துறை அதிகாரி ராமச்சந்திரன் என்பவர்தான் தனக்கு போலியான சான்றிதழ்களைத் தயாரித்துக் கொடுத்தார். அவருக்கு தேர்வுத் துறையைச் சேர்ந்த மேலும் 2 பேர் உதவியாக உள்ளனர் என்று கூறியுள்ளார்.
திருவேங்கடத்தின் வாக்குமூலத்தின்மூலம் தேர்வுத்துறையைச் சேர்ந்த அதிகாரிகளுக்கும் இந்த மோசடியில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
ராமச்சந்திரன் உள்ளிட்ட 3 பேரையும் பிடித்து விசாரித்து கைது செய்ய போலீஸார் தற்போது திட்டமிட்டுள்ளனர்.
முன்னதாக திருவேங்கடம் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த ஏராளமான வக்கீல்கள் திரண்டு நின்றனர்.
மாணவர்களுக்கு சம்மன்
இந்த நிலையில், என்ஜினீயரிங் கவுன்சிலிங்கில் பிளஸ்-2 போலி மதிப்பெண் பட்டியலுடன் சிக்கிய 15 மாணவ-மாணவிகள் மீதும் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கூறப்பட்டது.
இவர்கள் அனைவரும் விசாரணைக்காக மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜராக வேண்டுமென்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications