ஒருகால பூஜை நடக்கும் 10,000 கோவில்களின் பூசாரிகளுக்கு தமிழக அரசு இலவச சைக்கிள்!
சென்னை: தமிழகத்தில் ஒருகால பூஜை நடக்கும் சுமார் 10,000 கோவில்களின் பூசாரிகளுக்கு இலவச சைக்கிளை தமிழக அரசு வழங்கவுள்ளது.
தமிழகத்தில் 11,000 இந்துக் கோவில்களில் ஒரு கால பூஜை நடைபெறுகிறது. இதற்கு கிராம மக்களின் நன்கொடை மூலம் ரூ.2,500 வழங்கப்படுகிறது.
இந்தக் கோவில்களுக்கு இந்து அறநிலையத்துறை சார்பில் தலா ரூ.22,500 வீதம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டு இதன் மூலம் கிடைக்கும் வட்டித் தொகையான ரூ.250 பூசாரிகளுக்கு ஊதியமாக வழங்கப்படுகிறது.
இந் நிலையில் ஒருகால பூஜை நடத்தும் இந்தக் கோவில்களின் பூசாரிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை, தமிழக அரசு விரைவில் செயல்படுத்தவுள்ளது.
இதற்காக இந்து அறநிலையத்துறை ரூ.3 கோடி செலவில் 10,000 சைக்கிள்களை வாங்கவுள்ளது.
ஒரு கால பூஜை நடத்தும் பூசாரிகள் கோவில்களுக்கு நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளதாலும், அவர்களது வருமானம் மிகவும் குறைவு என்பதாலும் இந்த இலவச சைக்கிள்கள் வழங்க அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
சந்தீப் ராய் ரத்தோருக்கு புதிய பொறுப்பு.. சிறைத்துறை டிஜிபியாக நியமனம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications