இலங்கை போர்க்குற்றம் தொடர்பான ஐ.நா. குழு கூடி ஆலோசனை
நியூயார்க்: இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்கும்படி ஐ.நா.வால் நியமிக்கப்பட்டுள்ள ஆலோசனைக் குழு முதல் முறையாக கூடி ஆலோசித்துள்ளது.
ஐ.நா.வின் வடக்கு பகுதி கட்டடத்தில் உள்ள அலுவலகத்தில் இந்த முதல் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் குழு உறுப்பினர்களான மர்சுகி தருஸ்மன், யாஸ்மின் சூகா, ஸ்டீவன் ரட்னர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக் குழு 4 மாத காலத்திற்குள் தனது விசாரணையை முடித்து அறிக்கை தரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பொதுச் செயலாளர் பான் கி மூனிடம் இக்குழு தனது அறிக்கையை அளிக்கும்.
ஆனால் இந்தக் குழு உறுப்பினர்கள் இலங்கை வருவதற்கு விசா தர மாட்டோம் என இலங்கை அரசு ஏற்கனவே திட்டவடமாக அறிவித்துள்ளது. இந்தக் குழுவை எதிர்த்து கொழும்பில் போராட்டம், உண்ணாவிரதம், ஐ.நா. அலுவலகம் முற்றுகை என்று பெரிய டிராமா எல்லாம் போடப்பட்டது. இதனால் கடுப்பான ஐ.நா. கொழும்பில் உள்ள தனது வளர்ச்சி அலுலவகத்தை அதிரடியாக மூடியது நினைவிருக்கலாம்.
தற்போது இந்தக் குழு இலங்கைக்குப் போகாமலேயே விசாரணைக்குத் தேவையான விவரங்களைப் பெற முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளதாம்.
முதல் கூட்டத்தின்போது குழு உறுப்பினர்கள் ஐ.நா. அரசியல் விவகாரப் பிரிவுத லைவர் லின் பாஸ்கோவையும் சந்தித்து ஆலோசனை நடத்தியது. போர் உச்சத்தில் இருந்தபோதும், அதன் பிறகும் அங்கு சென்று பார்த்து வந்தவர் பாஸ்கோ என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications