8 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு-அடுத்த தலைமைச் செயலாளர் யார்?

இதைத் தொடர்ந்து, தமிழக அரசின் அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக அரசின் தலைமைச் செயலாளராக கே.எஸ்.ஸ்ரீபதி உள்ளார். அவர் 2008ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார். கடந்த ஏப்ரல் மாதத்துடன் அவர் ஓய்வு பெற்றிருக்க வேண்டும். ஆனால், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தொடர்பான பணிகள் இருந்ததால் அவரின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டது.
அவர் இப்போது ஓய்வுபெற விரும்புவதாகத் தெரிகிறது. இந் நிலையில் 8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் நிலையில் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
அவர்களது விவரம்: தேவேந்திரநாத் சாரங்கி-கூடுதல் தலைமைச் செயலாளர், வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைச் செயலாளர்.
எஸ்.மாலதி- கண்காணிப்பு ஆணையாளர்
ராகேஷ் கேக்கர்- மத்திய அரசுப் பணியில் மத்திய உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கூடுதல் செயலாளர்.
மிருத்யுஞ்ஜய் சாரங்கி- மத்திய அரசுப் பணியில் கூடுதல் செயலாளர், அமைச்சரவைச் செயலகம்.
அஜய் பட்டாச்சார்யா- மத்திய அரசுப் பணியி்ல் கூடுதல் செயலாளர், தகவல் தொடர்புத் துறை.
டாக்டர் குத்சியா காந்தி- கூடுதல் தலைமைச் செயலாளர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர்.
ஆர்.கிறிஸ்துதாஸ் காந்தி- கூடுதல் தலைமைச் செயலாளர், தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர்.
(இதில் டாக்டர் குத்சியா காந்தி மற்றும் டாக்டர் கிறிஸ்துதாஸ் காந்தி ஆகியோர் தம்பதிகளாவர்)
எம்.ஷீலா ப்ரியா- கூடுதல் தலைமைச் செயலாளர், பொருளியியல் மற்றும் புள்ளியியல் துறை இயக்குனர்.
கூடுதல் தலைமைச் செயலாளர் நிலையில் உள்ள இந்த எட்டு பேருக்கும் இப்போது தலைமைச் செயலாளர் நிலையில் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீபதி ஓய்வு பெற உள்ள நிலையில், இந்த 8 பேரில் ஒருவர் அடுத்த தலைமைச் செயலாளராக வாய்ப்புள்ளது. இதில் மாலதி, சாரங்கிக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications