ஆகஸ்டில் மேட்டூர் அணை திறக்கப்படும்-வீரபாண்டி ஆறுமுகம்
சேலம்: காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவைப் பயிர்கள் சாகுபடிக்காக மேட்டூர் அணை ஆகஸ்ட் மாதம் திறக்கப்படும் என்று விவசாயத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறினார்.
நிருபர்களிடம் பேசிய அவர், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 205 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும். அதன்படி இந்தஆண்டு இதுவரை வழங்க வேண்டிய தண்ணீரை அவர்கள் வழங்கவில்லை. கிணறு, ஆழ்துளை கிணற்று நீரைப் பயன்படுத்தி விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
இப்போது டெல்டா பாசன விவசாயிகள் தண்ணீரை எதிர்பார்த்து நாற்று நடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் மழை பெய்யத் தொடங்கியுள்ளதால் ஆகஸ்ட் மாதத்தில் மேட்டூர் அணை நிச்சயம் திறக்கப்படும் என்றார்.
இதனிடையே மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சற்றே அதிகரிக்க தொடங்கியுள்ளது. விநாடிக்கு 1188 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
அணையிலிருந்து விநாடிக்கு 1003 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் இன்று காலை 82 அடியாக இருந்தது. அணையின் மொத்த கொள்ளளவு 120 அடி என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications