கன்னியாகுமரியில் டெங்கு காய்ச்சலுக்கு குழந்தை பலி
நாகர்கோவில்: குமரி மேற்கு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலுக்கு கடந்த வாரத்தில் மட்டும் 2 பெண்கள் பலியாகினர்.
குலசேகரம் உண்ணியார் கோணத்தை சேர்ந்தவர் வர்க்கீஸ். நேற்று முன்தினம் இவரின் ஒன்பது வயது மகன் ஜேசன் டெங்கு காய்ச்சலால் பரிதாபமாக உயிர் இழந்தான்.
நேற்று கன்னியாகுமரியை சேர்ந்த 2 வயது குழந்தை ஒன்றும் டெங்கு காய்ச்சலுக்கு பலியானது.
கன்னியாகுமரி அலங்கார மாதா தெருவை சேர்ந்த பிரேமன்-பிரியா தம்பதிக்கு 2 வயதில் ரியா என்ற பெண் குழந்தை இருந்தது.
கடந்த வாரம் இக்குழந்தைக்கு காய்ச்சல் வந்ததையடுத்து நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தையின் உடல்நிலை மோசமடைந்தது. இதனால் மேல் சிகிச்சைக்காக குழந்தையை திருவனந்தபுரம் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு கொண்டு சென்ற சில மணி நேரத்திலேயே குழந்தை ரியா பரிதாபமாக இறந்ததாள்.
குழந்தையின் பிரிவால், அதன் பெற்றோர் மட்டுமின்றி அந்த பகுதி மக்களும் துயரத்தில் உள்ளனர். இந்த பகுதியில் ஏராளமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருவதாக மக்கள் தெரிவித்தனர். மேலும், மாவட்ட சுகாதாரத் துறையினர் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications