டெல்லியில் ஸ்டாலின்-ஆனால், முதல்வர்கள் கூட்டம் ரத்து!
டெல்லி: விலைவாசியைக் கட்டுப்படுத்துவது குறித்து குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தலைமையில் அமைக்கப்பட்ட 10 மாநில முதல்வர்கள் மாநாட்டிலும், பிரதமர் தலைமையில் நாளை நடக்கும் தேசிய மேம்பாட்டுக் கவுன்சில் கூட்டத்திலும் கலந்து கொள்ள துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றார்.
ஆனால், குஜராத் அமைச்சர் அமித் ஷா போலி என்கெளண்டர் விவகாரத்தில் சிபிஐயிடம் சிக்கியுள்ளதால் நரேந்திர மோடி தனது டெல்லி பயணத்தை ரத்து செய்துவிட்டார். இதனால் இன்று நடக்க இருந்த முதல்வர்கள் கூட்டம் ரத்தாகிவிட்டது.
முன்னதாக இக் கூட்டத்திலும் தேசிய வளர்ச்சிக் கவுன்தில் கூட்டத்திலும் முதல்வர் கருணாநிதி பங்கேற்பார் என்றும் சோனியாவை அவர் சந்திக்கக் கூடும் என்றும் கூறப்பட்டது. ஆனால், திடீரென அவருக்குப் பதிலாக ஸ்டாலின் டெல்லி சென்றார்.
நாளை நடக்கும் தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் தீவிரவாதம், நக்சலைட்டுகள் பிரச்சனை மற்றும் ஐந்தாண்டு திட்டங்கள் பற்றி விவாதிக்கப்படுகிறது.
இதற்காக நேற்று மாலை ஸ்டாலின் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனும் சென்றார்.
இரவு டெல்லி போய் சேர்ந்த ஸ்டாலினை மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, ராசா, ஜெகத்ரட்சகன், காந்தி செல்வன், நெப்போலியன், திமுக எம்.பிக்கள் கனிமொழி, திருச்சி சிவா, ஏ.கே.எஸ்.விஜயன், ஆதிசங்கர், ஜே.கே.ரித்தீஷ், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன் ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications