பிளஸ்டூ ஒன் மாணவி உள்பட 5 மாணவிகளை சீரழித்த பள்ளி முதல்வர் கைது
ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு உறைவிடப் பள்ளியின் முதல்வர்-இயக்குநர், பிளஸ் ஒன் மாணவியை ஒரு வருடமாக கற்பழித்து சீரழித்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர் தவிர மேலும் நான்கு மாணவிகளின் கற்பையும் இந்த முதல்வர் சூறையாடியுள்ளார். அவரை போலீஸார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
ஹைதராபாத்துக்கு மேற்கே, ரங்காரெட்டி மாவட்டத்தில் பார்க்வுட் இன்டர்நேஷனல் உறைவிடப் பள்ளி உள்ளது. அதன் இயக்குநராகவும், முதல்வராகவும் இருப்பவர் சலாஹுதீன் அயூப். இவர் ஒரு பிளஸ் ஒன் மாணவியை கடந்த ஒரு வருடமாக கட்டாயப்படுத்தி கற்பழித்து சீரழித்துள்ளார். இதனால் அந்த மாணவி கர்ப்பமாகியுள்ளார்.
வியாழக்கிழமை இதுதொடர்பாக அந்த மாணவி சார்பில் போலீஸில் புகார் தரப்பட்டது. புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மயக்க மருந்து கொடுத்து கற்பழிப்பு
இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் சத்யநாராயணா கூறுகையில், கற்பழிப்பு மற்றும் கிரிமினல் செயல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறோம். அந்த மாணவி மும்பையைச் சேர்ந்தவர். இங்கு தங்கிப் படித்து வருகிறார் என்றார்.
17 வயதான அந்த மாணவி தான் கொடுத்துள்ள புகாரில், அயூப் என்னை பலமுறை உறைவிடப் பள்ளி வளாகத்தில் உள்ள ஓய்வு இல்லத்திற்கு ஒரு முறை என்னை அவர் வரவழைத்தார். பின்னர் எனக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கற்பழித்து விட்டார்.
நான் மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்தபோது எனது பிறப்புறுப்பிலிருந்து ரத்தம் வழிந்தது, மிகவும் வலியை உணர்ந்தேன். அப்போது என்னைத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய முதல்வர், இதுகுறித்து வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என எச்சரித்தார்.
அதன் பிறகு கடந்த ஒரு வருடமாக என்னை மிரட்டி பாலியல் பலவந்தப்படுத்தி வந்தார் என்று கூறியுள்ளார். அந்த மாணவியுடன், அவரது பெற்றோரும் புகார் கொடுக்க வந்திருந்தனர்.
மாணவியின் தந்தை கூறுகையில், நான் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறேன். அந்த முதல்வரை சும்மா விடக் கூடாது. அவரை தூக்கில் போட வேண்டும் என்று கோபத்துடன் கூறினார்.
புகாரைத் தொடர்ந்து போலீஸார் சம்பந்தப்பட்ட பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினர். அங்கு அவரது அறையில் நான்கு புறமும் ரகசிய கேமராக்கள் வைக்கப்பட்டிருந்ததை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். அயூப்பின் வீட்டிலும் விசாரணை நடந்தது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
போலீஸார் நடத்திய விசாரணையில் மும்பை மாணவி தவிர மேலும் நான்கு மாணவிகளையும் இதே பாணியில் சலாவுதீன் சீரழித்தது தெரிய வந்தது. இந்த மாணவிகளை கற்பழித்த பின்னர் அவர்களை நிர்வாண நிலையில் வீடியோவில் படமாக்கிக் கொண்டு அதைக் காட்டி மிரட்டியே சீரழித்து வந்துள்ளார் பள்ளி முதல்வர்.
கொரிய மாணவியை 21 முறை கற்பழித்தார்
இந்த நிலையில் கொரியாவைச் சேர்ந்த மாணவி ஒருவரையும் சீரழித்துள்ளார் சலாஹுதீன். இதுகுறித்து அந்த மாணவி போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அதில், நான் பார்க்வுட் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறேன். ஒரு நாள் பள்ளி முதல்வர் சலாஹுதீன் எனக்கு இன்டர்நெட்டில் அறிவியல் பாடம் பற்றிய தகவல்களை காட்டுவதாக கூறி தனி அறைக்கு அழைத்து சென்றார்.
பாடம் குறித்த தகவல்களைக் காட்டிக் கொண்டிருந்த அவர் திடீரென ஆபாச படங்களை காட்டினார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நான் வெளியேற முயன்றேன். என்னை சமாதானப்படுத்திக் குளிர் பானம் கொடுத்தார். அதை குடித்ததும் நான் மயங்கி விட்டேன். அப்போது அவர் என்னை கற்பழித்து விட்டார். அதை தனது வீடியோ கேமராவிலும் படம் எடுத்தார்.
பின்னர் என்னிடம் அந்த வீடியோ படத்தை இன்டர் நெட்டில் வெளியிட்டு உன்னை அசிங்கப்படுத்தி விடுவேன் என்று மிரட்டி 21 முறை என்னை நாசம் செய்தார். அவரிடம் உள்ள அந்த ஆபாச வீடியோபடத்தை கைப்பற்றி அழித்து விடவேண்டும். என்னைப் போல் ஏராளமான மாணவிகளை மிரட்டி கற்பழித்த பள்ளி முதல்வர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
சலாவுதீன் மீது பெருமளவில் புகார்கள் குவிந்துள்ளதால், இவரால் பாதிக்கப்பட்ட மாணவிகள் குறித்து போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். மேலும் அவர் மாணவிகளை எடுத்த வீடியோ படங்களை இன்டர்நெட்டில் வெளியிட்டுள்ளாரா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
அடித்து நொறுக்கி சூறையாடினர்
இந்தத் தகவல் பரவியதும் அந்தப் பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்து பள்ளியை அடித்து நொறுக்கி சூறையாடினர்.
இந்த பள்ளி மாநில அரசின் கல்வித் திட்டத்தின் கீழ் வராது என்பதால் இதுகுறித்து சம்பந்தப்பட்ட பள்ளி மீது நடவடிக்கை எடுக்குமாறு சிபிஎஸ்இ வாரியத்திற்குப் பரிந்துரைத்துள்ளதாக மாநில கல்வி அமைச்சர் மாணிக்க வர பிரசாத் தெரிவித்துள்ளார்.
இந்தப் பள்ளிக்கு கனடா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவூதி அரேபியா ஆகிய நாடுகளிலும் கிளைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications