புதிய தமிழகத்துக்கு எத்தனை இடம்?: ஜெ முடிவு செய்வார்- கிருஷ்ணசாமி

நிருபர்களிடம் அவர் கூறுகையில், வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். புதிய தமிழகத்துக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படுகிறது என்பதை தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா முடிவு செய்து அறிவிப்பார்.
69 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்த பெருமை அதிமுக ஆட்சியையே சாரும். அதுவும் ஜெயலலிதாவுக்கே அந்த பெருமை சேரும். தமிழக முதல்வர் கருணாநிதி அப்போது அறிக்கையோடு நிறுத்திக் கொண்டார்.
தலித் அதிகாரிகளின் விரோத போக்காக திமுக அரசு செயல்படுகிறது. ஏற்கனவே கிறிஸ்துதாஸ் காந்தியை சஸ்பெண்ட் செய்தார்கள். இப்போது உமா சங்கரை சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள்.
மதுரை மேலூர் பகுதிகளில் கனிம வள மோசடியை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். அப்படி தடுத்து நிறுத்ததாவிட்டால் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து போராட்டம் நடத்துவோம்.
இலங்கைத் தமிழர் பிரச்னையில் தமிழக முதல்வர் கருணாநிதி மக்களை ஏமாற்றி வருகிறார். ஏற்கெனவே இலங்கைக்குச் சென்று வந்த நாடாளுமன்றக் குழுவினர் எதையும் சாதிக்காத நிலையில் இப்போது மீண்டும் ஒரு தூதுக் குழுவை நியமிக்க வேண்டும் என்பது ஏமாற்று வேலை.
தமிழர்கள் வாழும் பகுதிகளில் ஆயிரக்கணக்கான சிங்களர்களை குடியேற்றம் செய்யும் இலங்கை அரசின் நடவடிக்கையை அந்நாட்டு எம்.பிக்கள் வெட்டவெளிச்சமாக்கி உள்ளனர்.
இதுவரையில் இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் எவ்வித நன்மையும் செய்யவில்லை. எனவே, இப்போது இலங்கை அரசு மீது ஐ.நா. விசாரணை நடத்த இந்திய அரசு நிர்பந்திக்க வேண்டும். அந்த ஒரு கடமையையாவது தமிழக முதல்வர் செய்ய வேண்டும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications