உள்ளாட்சி இடைத்தேர்தல்-திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி
சென்னை: தமிழகத்தில் நடந்த உள்ளாட்சி இடைத்தேர்தலில் பெரும்பாலான இடங்களை திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் கைப்பற்றியுள்ளன.
தமிழகம் முழுவதும் காலியாக இருந்த 258 உள்ளாட்சி இடங்களுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. வியாழக்கிழமை இத்தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது. இதில் கூடுதல் இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
திருச்சி மாநகராட்சி 28வது வார்டுக்கு நடைபெற்ற தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். பல்வேறு நகராட்சிகளில் 11 கவுன்சிலர்களை தேர்ந்தெடுக்க நடைபெற்ற தேர்தலில், திமுக வேட்பாளர்கள் பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ளனர்.
ஆத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 28வது வார்டில் திமுக வேட்பாளர் அகிலா வெற்றி பெற்றுள்ளார். சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் 3ம் நிலை நகராட்சியில் உள்ள 11வது வார்டு தேர்தலில் திமுக வேட்பாளர் அழகிரி வெற்றி பெற்றுள்ளார். இதேபோல் பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த பஞ்சாயத்து இடைத்தேர்தலில் ஊரப்பாக்கம், ஒரத்தூரில் அ.தி.மு.க. ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். காட்டான்குளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊரப்பாக்கம் பஞ்சாயத்து தலைவராக அ.திமு.க. ஆதரவு பெற்ற பெருமாள், தி.மு.க., வேட்பாளரை விட 72 ஓட்டுக்கள் கூடுதல் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இது போல் ஒரத்தூர் பஞ்சாயத்துத் தலைவராக சீனிவாசன் என்ற அ.தி.மு.க. ஆதரவு பெற்றவர் வென்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications