குறுவை சாகுபடி-ஆடிப்பெருக்கு: 28ம் தேதி மேட்டூர் அணை திறப்பு
சென்னை: ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 12ம் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்படும். ஆனால், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் அணையில் தண்ணீர் குறைவாக இருந்ததால் அந்தத் தேதியில் திறக்கப்படவில்லை.
பொதுவாக 50 டி.எம்.சி.க்கு மேல் தண்ணீர் இருந்தால்தான் மேட்டூர் அணை திறக்கப்படும். தற்போது 44 டி.எம்.சி.தான் தண்ணீர் தான் உள்ளது.
காவிரி நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பின்படி கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவாக இருந்தது.
இதையடுத்து கர்நாடாகத்திடம் இருந்து தமிழகத்துக்குரிய நீரை பெற பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் ராமசுந்தரம் மற்றும் அதிகாரிகள் கர்நாடக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேலும் கர்நாடக முதல்வர் எதியபரப்பாவுக்கும் முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதினார். அதில், காவிரி நடுவர் மன்ற இடைக்கால உத்தரவின்படி மேட்டூர் அணைக்கு இதுவரை 40,000 மில்லியன் கன அடி தண்ணீர் வந்திருக்க வேண்டும். ஆனால், 12,000 மில்லியன் கன அடி தண்ணீரே வந்துள்ளது. மீதம் 28,000 மில்லியன் கனஅடி தண்ணீரை உடனே திறந்து விட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந் நிலையில் இப்போது 82 அடி நீர் மட்டமே இருந்தாலும் ஆடிபெருக்கையொட்டி தண்ணீர் திறந்து விடவும், அதைத் தொடர்ந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீரைத் திறந்துவிடவும் முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதனால் 11 காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
வரும் ஆகஸ்டு மாதம் 3ம் தேதி தமிழக மக்களால் ஆடிப் பெருக்கு விழா கொண்டாடப்படுவதையொட்டி, மேட்டூரில் இருந்து காவிரியில் 28-7-2010 அன்று தண்ணீர் திறந்துவிடப்படும்.
அதனைத் தொடர்ந்து விவசாயிகளுக்கு சாகுபடி பணிகளை மேற்கொள்வதற்காக தண்ணீர் விடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications