குளச்சல் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜெயபால் திடீர் மரணம்

ஜெயபால் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று உயிரிழந்தார்.
அவருக்கு புஷ்பம் என்ற மனைவியும், 2 மகன்கள், ஒருமகளும் உள்ளனர். ஜெயபாலின் மகன் சிவபிரபு நாகர்கோவில் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருக்கிறார்.
கடந்த 2006ம் ஆண்டு முதல் முறையாக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு குளச்சலில் வெற்றி பெற்றார்.
1996-ம் ஆண்டு முதல் 15 ஆண்டுகளாக குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தார்.
ஏற்கனவே காங்கிரஸ் சட்டசபை தலைவராக இருந்த சுதர்சனம் மறைவடைந்ததால் அவரது பூந்தமல்லி தொகுதி காலியாக உள்ளது. இந்த நிலையில் ஜெயபால் மறைவு காரணமாக குளச்சல் தொகுதியும் காலியாகவுள்ளது.
ஆனால் தமிழக சட்டசபை பொதுத் தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்களே இருப்பதால் இந்த தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் வர வாய்ப்பில்லை என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications