சேலத்தில் நித்தியானந்தாவுக்கு எதிராக போராட்டம்-போஸ்டர்கள் கிழிப்பு
Subscribe to Oneindia Tamil
சேலம்: நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருந்து சிக்கிய சாமியார் நித்தியானந்தாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் போராட்டம் நடந்தது. அவரது போஸ்டர்களை கிழித்த 17 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பவுர்ணமி பூஜைக்கு நித்தியானந்தா பக்தர்களை அழைக்கும் வகையில் அவரின் படத்துடன் சேலம் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், பழைய கலெக்டர் அலுவலகம் உள்பட பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன.
இந்த நிலையில் தலித் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் வக்கீல் முத்துசாமி தலைமையில் நேற்று சேலம் பழைய கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்கள். அங்கு நித்யானந்தாவிற்கு எதிராக அவர்கள் கோஷம் எழுப்பினார்கள். மேலும் நித்தியானந்தாவின் போஸ்டர்களை கிழித்தனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 17 பேரை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.












Click it and Unblock the Notifications