கருணாநிதிக்கு பெருந்தலைவர் காமராஜர் மீது உண்மையான மரியாதை இல்லை-ஜெ.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் கல்விப்புரட்சியை உருவாக்கிய வரும், நாட்டு சேவைக்கென தன்னை அர்ப்பணித்துக் கொண்டவரும், மக்களின் உள்ளங்களில் நிலையான இடத்தைப் பிடித்தவரும், பாரதப்பிரதமரையே தேர்வு செய்யக்கூடிய அளவுக்கு பெருமை பெற்ற வரும்,
தமிழகத்தின் முன்னாள் முதலமைச் சருமான கர்மவீரர் காமராஜர் அவர்களின் பெயரை ராதாபுரம் பேருந்து நிலையத்திற்குச் சூட்ட வேண்டும் என்றும், அங்கு அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் பெற்றோர்களான முத்துவேலர் - அஞ்சுகத்தம்மாள் சிலைகளை அகற்றிவிட்டு, பெருந்தலைவர் காமராஜர் - தியாகி கக்கன்ஜி சிலைகளை நிறுவவேண்டும் என்றும் வலியுறுத்தி 12.10.2009 அன்று நானும் அறிக்கை விடுத்தேன்.
இதனை வலியுறுத்தி 22.11.2009 அன்று அ.தி. மு.க. சார்பில், திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
இதனையடுத்து, ராதாபுரத்தில் அமைந்துள்ள பேருந்து நிலையத்திற்கு முத்துவேலர் - அஞ்சுகத்தம்மாள் பேருந்து நிலையம் என்று பெயரிட்டு, அங்கு இருவரது சிலையையும் திறப்பதற்கான நடவடிக்கையை கை விடுவதாக கருணாநிதி அறிவித்தார்.
இருப்பினும், 13.10.2009 அன்று நடைபெற்ற பேருந்து நிலைய திறப்பு விழாவின் போது, ராதாபுரம் பேருந்து நிலையம் என்று தான் பெயர் சூட்டப்பட்டதே தவிர, பெருந்தலைவர் காமராஜரின் பெயர் சூட்டப்படவில்லை.
இதற்கு சில நாட்களுக்குப்பிறகு, ராதாபுரம் பஞ்சாயத்து யூனியன் தலைவர் சிவகுமார் என்பவர் தலைமையில் சிலர் முத்துவேலர் - அஞ்சுகத்தம்மாள் சிலைகளை அங்கு திறந்து வைத்தது.
ராதாபுரம் பேருந்து நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரை சூட்டிட வேண்டுமென்று வைக்கப்பட்ட கோரிக்கையினை ஏற்று, ராதாபுரம் பேருந்து நிலையம் என்று தற்போதுள்ள பெயரை பெருந்தலைவர் காமராஜர் பேருந்து நிலையம் என்று வைக்க முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளதாக அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
உண்மையிலேயே பெருந்தலைவர் காமராஜரின் மீது கருணாநிதிக்கு மரியாதை இருந்திருக்குமானால், 13.10.2009 அன்றே மக்கள் கோரிக்கையையும், தியாகி சுடலைமுத்து நாடாரின் கோரிக்கையினையும், என்னுடைய வேண்டுகோளினையும் ஏற்று ராதாபுரம் பேருந்து நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராஜரின் பெயரை சூட்டியிருக்க வேண்டும். ஆனால் அதை கருணாநிதி செய்யவில்லை.
இப்படிப்பட்ட நபருடன் கூட்டணி வைத்துக் கொண்டு காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று காங்கிரசார் கூறுவது நகைப்புக்குரியதாக உள்ளது.
எது எப்படியோ, ராதாபுரம் பேருந்து நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பேருந்து நிலையம் என்று தற்போது பெயர் சூட்டப்பட்டிருப்பது அப்பகுதி மக்களுக்கும், தியாகி சுடலைமுத்து நாடார் அவர்களுக்கும், அ.தி.மு.க.வுக்கு கிடைத்த வெற்றி என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதே போன்று, பெருந்தலைவர் காமராஜர் பேருந்து நிலையத்தில் நிறுவப் பட்டுள்ள முத்துவேலர் - அஞ்சுகத்தம்மாள் சிலைகளை அகற்றிவிட்டு பெருந் தலைவர் காமராஜர், தியாகி கக்கன்ஜி சிலைகளை நிறுவவும் தி.மு.க. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெருந்தலைவர் காமராஜர், தியாகி கக்கன்ஜி ஆகியோரின் சிலைகளை பேருந்து நிலையத்தில் 2.10.2010-க்குள் அமைக்காவிடில், மீண்டும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று தியாகி சுடலைமுத்து நாடார் அறிவித்து இருப்பதாக செய்தி வந்துள்ளது.
இதற்கு அ.தி.மு.க. தனது முழு ஆதரவினை நல்குவதோடு, காந்தி பிறந்த தினமும், காமராஜர் நினைவு தினமுமான 2.10.2010-க்குள், அங்கு தற்போது அமைக்கப்பட்டுள்ள வேண்டாத சிலைகளை அகற்றிவிட்டு, பெருந்தலைவர் காமராஜர், தியாகி கக்கன்ஜி ஆகி யோரின் சிலைகளை நிறுவ தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்காவிடில், அ.தி.மு.க. சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications