சிங்கள அரசுடன் கை கோர்த்துள்ள ஏர் டெல்லைப் புறக்கணிப்போம்-நாம் தமிழர்
சென்னை: சிங்கள இனவெறி அரசுடன் இணைந்து செயல்பட்டு வரும் ஏர் டெல் நிறுவனத்தைப் புறக்கணிக்கும் போராட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக நாம் தமிழர் அமைப்பு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை
சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு ஏர் டெல் புறக்கணிப்புப் போராட்டத்திற்கு தமிழினப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் அமைப்பாளர் இதழாளர் க.அய்யநாதன் தலைமை தாங்கினார்.
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் ஏர்டெல் கைபேசி சிம்கார்டு ஒன்றை உடைத்து வைத்து ஏர்டெல் புறக்கணிப்புப் போராட்டத்தை துவக்கி வைத்தார். புறக்கணிக்கப்பட்ட ஏர்டெல் கைபேசி சிம்கார்டுகள் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு முன்பு குவிக்கப்பட்டிருந்தன.
மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன், ஏர்டெல் நிறுவனத்தை நாம் புறக்கணிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்திப் பேசினார்.
இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி, இப்போராட்டம் ஒரு துவக்கமே என்றும் வடநாட்டு நிறுவனங்கள் இவ்வாறு செயல்படுவதை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த வே.பாரதி, வீதி தோறும் இப்புறக்கணிப்பை நாங்கள் வலியுறுத்துவோம் என்று பேசினார்.
தொடர்ந்து, பெரியார் திராவிடர் கழக சென்னை மாவட்டத் துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன், தமிழக பெண்கள் செயற்களத்தின் அமைப்பாளர் வழக்கறிஞர் கயல்விழி, இதயக்கனி இதழ் ஆசிரியர் விஜயன், தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த சரவணக்குமார், ஓவியர் வீரசந்தானம் ஆகியோர் கலந்து கொண்டு ஏர்டெல் புறக்கணிப்பிற்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துப் பேசினார்.
இக்கூட்டத்தின் வாயிலாக, ஏர்டெல் கைபேசி சேவைகளை புறக்கணிக்க விரும்புவோர் அந்த சிம்கார்டுகளை வரும் செப்டம்பர் 27 திலீபன் நினைவு நாளுக்குள் அனுப்பி வைக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டது எனக் கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications