கொலை, கொள்ளை வழக்கில் சிக்கிய திமுக பிரமுகர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திண்டுக்கல்: கொலை, கொள்ளை, வெடிமருந்து தயாரித்தல் போன்ற வழக்குகளில் சிக்கிய தி.மு.க. பிரமுகர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
ஆட்களை கடத்தி மிரட்டல், வழிப்பறி, வெடிமருந்து தயாரித்தல் உட்பட 39 வழக்குகளில் சம்பந்தப்பட்ட தி.மு.க. பிரமுகரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகேயுள்ள சொட்டமாயனூரை சேர்ந்தவர் பிரபல ரவுடி வி.சி.ராஜேந்திரன் (45). இவர் ஒரு தி.மு.க. பிரமுகர்.
இவர் மீது 2 கொலை வழக்குகள், 8 கொலை முயற்சி வழக்குகள், கலவரத்தை துண்டியதாக 9 வழக்குகள், வழிப்பறியில் ஈடுபட்டதாக 3 வழக்குகள், சொத்து கேட்டு மிரட்டி ஆட்களை கடத்தியதாக 15 வழக்குகள், 2 வெடிமருந்து வழக்குகள் என மொத்தம் 39 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், இவர் கடந்த 20-ம் தேதி வேடசந்தூர் அருகே உள்ள தண்ணீர் பந்தம்பட்டியைச் சேர்ந்த விவசாயி சித்தையன் என்பவரையும், அவரது மனைவி சுப்புலட்சுமியையும் காரில் கடத்தி, சொத்து கேட்டு மிரட்டி, வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிய சம்பவத்தில் எரியோடு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து, இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய முத்துச்சாமி எஸ்.பி. பரிந்துரையின் பேரில், மாவட்ட கலெக்டர் வள்ளலார் உத்தரவிட்டார். போலீசார் இவரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications