வங்கி திவால்: கேதன் பரேக்கிடம் ரூ.2.5 கோடி லஞ்சம் வாங்கிய அமித் ஷா!

2005ம் ஆண்டில் குஜராத்தின் மகாதேவ்புரா மெர்கன்டைல் கூட்டுறவு வங்கியில் ரூ. 1,600 கோடியை சுருட்டி அந்த வங்கியையே திவால் ஆக்கியவர் கேதன் பரேக்.
எந்தவிதமான சொத்துப் பத்திரங்களையும் தராமல் இந்த வங்கியிலிருந்து ரூ. 1,600 கோடி கடன் வாங்கினார் பரேக். ஆனால், அந்தப் பணத்தைத் திருப்பிச் செலுத்தாதால் வங்கியே திவால் ஆனது. (இந்த வங்கியின் இயக்குனராக இருந்தவர் அமித் ஷா என்பது குறிப்பிடத்தக்கது.)
இதையடுத்து பரேக் கைது செய்யப்பட்டார். ஆனால், அவரை வழக்கிலிருந்து காப்பாற்ற அமித் ஷா முயன்றதாக அப்போதைய குஜராத் சிபிஐ போலீஸ் பிரிவின் ஏடிஜிபி குல்தீ்ப் ஷர்மா, தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அப்போதைய தலைமைச் செயலாளர் சுதிர் மன்காடுக்கு அவர் எழுதிய கடிதத்தில், கேதன் பரேக்கை காப்பாற்ற அமைச்சர் ஷா ரூ. 2.5 கோடி லஞ்சம் வாங்கியுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.
கிரிஷ் தானி என்ற இடைத் தரகரின் வீட்டில் வைத்து இந்தப் பணம் அமித் ஷாவிடம் தரப்பட்டது தனது விசாரணையில் உறுதியாகியுள்ளதாகவும், இந்தப் பணத்தை வாங்கிக் கொண்டதால் அமித் ஷாவை இயக்குனராகக் கொண்ட அந்த வங்கி, கேதன் பரேக்கை ஜாமீனில் விடுவித்ததை எதிர்த்து மேல் முறையீடு செய்யாமல் விட்டுவிட்டதாகவும் அந்தக் கடிதத்தில் குல்தீப் கூறியுள்ளார்.
இதனால் ஷா மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தி்ன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் குல்தீ்ப் பரிந்துரை செய்துள்ளார்.
ஆனால், அந்தக் கடிதத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தலைமைச் செயலாளரும் முதல்வர் நரேந்திர மோடியும் அந்தக் கடிதத்தையே மறைத்துவி்ட்டனர்.
மேலும் இந்த விவகாரத்தில் கடந்த 5 ஆண்டுகளாக சிஐடி போலீசாரை விசாரணை நடத்த விடாமலும் குஜராத் முதல்வர் தடுத்துவிட்டார். இதனால் இந்த வழக்கிலிருந்து அமித் ஷா மட்டுமின்றி கேதன் பரேக்கும் தப்பிவிட்டனர். இப்போது பரேக் ஜாமீனில் சுதந்திரமாக உலவி வருகிறார்.
அத்தோடு இல்லாமல் ஷா லஞ்சம் வாங்கியது குறித்து கடிதம் எழுதிய சிஐடி ஏடிஜிபி குல்தீப் ஷர்மாவை அந்தப் பதவியிலிருந்தும் தூக்கியடித்தார் முதல்வர் நரேந்திர மோடி.
ஷர்மா இப்போது குஜராத் மாநில ஆடுகள் மற்றும் கம்பளி வளர்ச்சி வாரியத்தின் தலைவராக எந்த அதிகாரமும் இல்லாத பதவியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரது தம்பி மீதும் பொய் வழக்குகள் போட்டு கடும் தொல்லை கொடுத்து வருகிறார் குஜராத் அரசு.
ஐபிஎஸ் அதிகாரியான தன்னை கம்பளி வாரியத்துக்கு தலைவராக நியமித்தது தவறு என்று கூறி மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார் ஷர்மா. தன்னை மத்திய அரசுப் பணிக்கு மாற்றுமாறு அவர் வைத்த கோரிக்கையையும் குஜராத் அரசு ஏற்க மறுத்துவிட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications