30 லட்சம் டன் அரிசி-கோதுமையை விடுவிக்க மத்திய அரசு முடிவு
Subscribe to Oneindia Tamil

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் நடந்த அமைச்சர்கள் குழுக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன்படி, ரேஷன் கடைகள் மூலம் வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ளவர்களுக்கும் கோதுமை மற்றும் அரிசி முறையே ரூ.6.10 மற்றும் ரூ.8.30 விலைக்கு வழங்கப்படும்.
இத்திட்டத்தின்கீழ் மாதம் 15 கிலோவுக்குக் குறைவாக உணவுப் பொருள்களை ரேசன் கடைகளில் பெறுவோருக்கு மட்டும் கூடுதலாக கோதுமை மற்றும் அரிசி வழங்கப்படும்.
இதன் மூலம் 11.5 கோடி குடும்பங்கள் பலனடையும்.
மேலும் கிடங்குகளில் அளவுக்கு அதிகமாக உணவுப் பொருள்கள் தேங்குவதைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல் உணவுப் பொருள்கள் அடுத்த 6 மாதங்களுக்கு வழங்கப்படும்.












Click it and Unblock the Notifications