பள்ளியை தனியாருக்கு விற்க முயற்சி: அனைத்து கட்சி சாலை மறியல்
எட்டையபுரம்: எட்டையபுரம் பள்ளியை தனியாருக்கு விற்க முயற்சிப்பதை கண்டித்து அனைத்து கட்சியினர் மறியல் செய்தனர்.
எட்டையபுரத்தில் ராஜா சமஸ்தானம் சார்பில் நிர்வாகிக்கப்பட்டு 115 ஆண்டு பழமை வாய்ந்த மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இதில் சுற்றுபட்டியை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்த பள்ளியை தனியார் ஒருவருக்கு விற்க பள்ளி நிர்வாகம் முடிவு எடுத்து அதற்கான பத்திர பதிவு ஏற்பாடுகளை செய்து வந்தது. இது பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பள்ளியை தனியாருக்கு விற்க எதிர்ப்பு தெரிவித்து ஜூலை 26-ம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அனைத்து கட்சியினர் அறிவித்தனர்.
அதன்படி நேற்று காலை எட்டையபுரம் சார்பதிவாளர் அலுவலகம் முன்புள்ள ரோட்டில் அனைத்து கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள், 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் கோவில்பட்டி ஆர்.டி.ஓ. ரவிசந்திரன், விளாத்திகுளம் டி.எஸ்.பி. ராஜமன்னார், எட்டையபுரம் தாசில்தார் மங்களம், கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பள்ளியை தனியாருக்கு விற்க கூடாது, அரசே ஏற்று நடத்த வேண்டும், தனியார் யாரும் அங்கு பிளாட் போட அனுமதிக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர். இதையடுத்துஅவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications