நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டாக்டர் வேடமிட்டு செல்போன் திருடியவர் கைது
நெல்லை: நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டாக்டர் வேடமிட்டு நோயாளியின் செல்போனை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் மேலகூட்டுடன் காட்டை சேர்ந்தவர் குருசந்திரன். இவர் இடது கை முறிவுக்காக பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்து ஆர்த்தோ வார்டில் சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த 19-ம் தேதி இரவு வார்டில் அவர் வைத்திருந்த செல்போன் திருடு போனது. இது குறித்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போலீசில் புகார் செய்யப்பட்டது. ஏற்கனவே மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பைக்குகள் திருடு போனதாலும், குழந்தை கடத்தல் சம்பவம் நடந்ததாலும் அங்கு கண்காணிப்பை தீவிரப்படுத்த நெல்லை மாநகராட்சி கமிஷனர் அபய்குமார் சிங் உத்தரவிட்டார்.
அதன்பேரில் மருத்துவமனை வளாகத்தை சுற்றி தனிப்படையினர் கண்காணித்து வந்தனர். அப்போது மாலை 6 மணிக்கு மருத்துவமனை ஆர்த்தோ வார்டுக்குள் டாக்டர் உடையுடன் சென்றவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் கிருபாவனம் பள்ளிகல்லையை சேர்ந்த வர்கீஸ் குஞ்சுமோன் என்பவரின் மகன் அனுப் என்பதும், 10-ம் வகுப்பு கூட தேர்ச்சி பெறாத இவர் டாக்டர் வேடமிட்டு கடந்த 19-ம் தேதி மருத்துவமனைக்குள் புகுந்து குருசந்திரனின் செல்போனை திருடியதும் தெரிய வந்தது.
மருத்துவமனைக்குள் இதேபோல் பலமுறை புகுந்து திருடியுள்ளதாக அனுப் தெரிவித்துள்ளார். இது குறித்து தனிப்படை போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications