வருமான வரிக் கணக்கு தாக்கல்-சென்னையில் 40 சிறப்பு கவுன்டர்கள் திறப்பு
சென்னை: வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வோரின் வசதிக்காக சென்னையில் 40 சிறப்பு கவுன்டர்கள் இன்று முதல் செயல்படத் தொடங்கியுள்ளன.
இந்த சிறப்பு வசதி வருகிற 31ம் தேதி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாதச் சம்பளம் வாங்குவோர் வருகிற 31-ந்தேதிக்குள் வருமான வரி கணக்கை வருமான வரி அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். தற்போது வருமான வரித்துறையின் இணைய தளம் வழியாகவும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யலாம். தனியார்களும் கூட இத்தகைய வசதியை கட்டணம் வாங்கிக் கொண்டு செய்து தருகின்றனர்.
கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு 40 சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை இன்று முதல் செயல்படத் தொடங்கியுள்ளன.
காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை இங்கு வருமான வரி கணக்கு சரல் படிவங்களை தாக்கல் செய்யலாம்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் 4 லட்சத்து 87 ஆயிரத்து 262 பேர் வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்தனர். சென்னையில் மட்டும் 2 லட்சத்து 51 ஆயிரத்து 262 பேர் தாக்கல் செய்தனர்.
இந்த ஆண்டு தென்னக ரயில்வே, விமான நிலையம், ஐ.சி.எப்., சென்னை துறைமுக பொறுப்பு கழகம், அசோக் லேலண்ட், டைடல் பார்க் உள்பட 8 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இதில் 40 ஆயிரம் பேர் வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரிக்கணக்கு தாக்கல்செய்வோர் கண்டிப்பாக தங்களது பான் கார்ட் எண்ணைக் குறிப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications