கணவர் கடத்தல்-மீட்டு தர கோரி இளம்பெண் போராட்டம்
களியாக்கவிளை கடத்தப்பட்ட கணவரை மீட்டுத் தரக் கோரி பெண் போராட்டத்தில் குதித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் களியாக்கவிளை அடுத்து எள்ளுவிளையை சேர்ந்தவர் சந்தியா. சென்னையில் வேலை பார்த்தபோது செல்வம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார். 2 குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில் செல்வத்துக்கும், வேறொரு பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டது. இதனால் சந்தியாவை விட்டு விட்டு அந்த பெண்ணுடன் குழந்தைகளை அழைத்து சென்று விட்டார். சொந்த ஊருக்கு வந்த சந்தியாவுக்கு அங்கு மாளிகை கடை நடத்தி வந்த அசோகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் இருவரும் சென்னைக்கு சென்று குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில் அசோகனின் பெற்றோர் சந்தியாவை மருமகளாக ஏற்று கொள்வதாக கூறி இருவரையும் ஊருக்கு அழைத்துள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு சந்தியாவும், அசோகனும் ஊருக்கு வந்தனர். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் அசோகனை குண்டுகட்டாக தூக்கி காரி்ல் கடத்தி சென்று விட்டனர். இதையடுத்து காதல் கணவனை மீட்டு தர கோரி அசோகன் வீட்டு முன்பு அமர்ந்து சந்தியா போராட்டம் நடத்தினார். தற்கொலை செய்து கொள்வேன் என்றும் மிரட்டினார்.
மார்த்தாண்டம் மகளிர் போலீசார் வந்து சந்தியாவிடம் விசாரணை நடத்தினர். அசோகன் எங்கு உள்ளார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications