கூடுதல் கட்டணம் கேட்டதால் பொறியியல் மாணவர் தற்கொலை முயற்சி
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கூடுதல் கட்டணம் கேட்டு கல்லூரி நிர்வாகம் மாணவனை துன்புறுத்தியதால் அவர் விஷமருந்தி தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி செல்லும் சாலையில் உள்ளது எம்.என்.எஸ்.கே. தனியார் பொறியியல் கல்லூரி.
இந்த கல்லூரியில் இ.இ.இ. பிரிவில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு இரண்டு செமஸ்டர்களுக்கும் சேர்த்து மொத்தமாக ரூ. 19 ஆயிரம் கட்டணத்தை செலுத்த சொல்லுவதாகவும், கல்லூரியில் சேரும் பொழுது நிர்ணயித்த கட்டணத்தைவிட மேலும் கூடுதலாக பணம் கேட்டு மிரட்டுவதாகவும் மாணவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
இது குறித்து கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் திருச்சி அண்ணா பல்கலைக்கழக இயக்குநருக்கு புகார் கடிதம் அனுப்பியிருந்தனர்.
இந்த நிலையில், கல்லூரிக்குச் சென்ற மாணவர்களைத் தடுத்து நிறுத்தி கட்டணத்தை செலுத்தாத மாணவர்கள் பலரையும் கல்லூரிக்குள் நுழையவிடாமல் கல்லூரி நிர்வாகம் வெளியேற்றியுள்ளது.
இதனால் மனமுடைந்த மாணவன் இளையராஜா (இ.இ.இ. பிரிவில் இறுதி ஆண்டு படிப்பவர்) விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனையடுத்து அவரை சிகிச்சைக்காக, புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications