மிகவும் நடுநிலையுடன் பணிபுரிந்தேன்-நரேஷ் குப்தா
சென்னை: தமிழக தேர்தல் அதிகாரியாக நடுநிலையுடன் பணிபுரிந்தேன் என்ற திருப்தி எனக்கு உள்ளது என்று நரேஷ் குப்தா கூறினார்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பதவியிலிருந்து நாளை ஓய்வு பெறும் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
சில நாட்களுக்கு முன் நைஜீரியா சென்று வந்தேன். அங்கு அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. அவர்களுக்கு இந்திய தேர்தல் முறை பற்றி விளக்கம் அளித்துள்ளேன்.
பல்வேறு அரசுத் துறைகளில் 37 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளேன். 8 வருடங்கள் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்தேன். பொதுத் தேர்தலும், இடைத் தேர்தல்களும் மிக சவாலானவை.
இதில் 2009ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் மிக மிக சவாலானதாக அமைந்தது. ஆனாலும் பொதுத் தேர்தலை விட இடைத் தேர்தல்களில் தான் நான் அதிக கவனம் செலுத்த வேண்டியிருந்தது.
என் பணிக் காலத்தில் நான் நடுநிலையாளனாக பணிபுரிந்தேன் என்ற திருப்தி இருக்கிறது.
பணத்துக்காக ஓட்டுப்போடும் பிரச்சனை குறித்து பலமுறை செய்தியாளர்கள் கேள்வி கேட்டிருக்கிறார்கள். பணம் கொடுப்பதைத் தடுக்க என்ன செய்யலாம் என்பதற்கு நான் பதில் சொல்வதை விட புதிதாக வரும் தலைமை தேர்தல் அதிகாரி பதில் சொன்னால் சரியாக இருக்கும் என்றார்.
கேள்வி: உங்கள் அனுபவத்தை புத்தகமாக எழுதுவீர்களா?
பதில்: 37 ஆண்டுகள் அரசு ஊழியராக பணிபுரிந்த எனக்கு சிறிது ஓய்வு தேவை. நான் புத்தகம் எழுதினாலும் மற்றவர்கள் படிப்பார்களா?. என்றாலும் என் அனுபவங்களை மற்றவர்களிடம் நடைமுறையில் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கிறேன்.
கேள்வி: நீங்கள் அரசியலில் ஈடுபடுவீர்களா?
பதில்: அப்படி எந்த எண்ணமும் எனக்கு இல்லை. ஆனால், மிக முக்கியமான கட்டத்தில் நான் ஓய்வு பெறுகிறேன் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications