தலைமைத் தேர்தல் அதிகாரியாக பிரவீன் குமார் நியமனம்
சென்னை: தமிழக தலைமைத் தேர்தல்அதிகாரி நரேஷ் குமார் விடைபெறுகிறார். இதையடுத்து அவரது இடத்திற்கு ஐஏஎஸ் அதிகாரி பிரவீன் குமார் நியமிக்கப்படவுள்ளார்.
கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் இருப்பவரான நரேஷ் குப்தா தற்போது தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் நாளை மறுநாளுடன் முடிவடைகிறது.
உ.பி மாநிலத்தைச் சேர்ந்த நரேஷ் குப்தா, பல்வேறு உயர் பதவிகளை வகித்தவர். திமுக ஆட்சிக்காலத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்து வரும் நரேஷ் குப்தா, கடந்த 1991-96 அதிமுக ஆட்சிக்காலத்தின்போதும் 2 ஆண்டுகள் இப்பதவியை வகித்தவர்.
மிகவும் எளிமையான, நேர்மையான அதிகாரி என்று அனைத்துத் தரப்பினராலும் (அரசியல்வாதிகளைத் தவிர) பாராட்டப்பட்ட நரேஷ் குப்தா ஜூலை 31ம் தேதியுடன் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார். இதையடுத்து அப்பதவிக்கு ஐஏஎஸ் அதிகாரி பிரவீன் குமார் நியமிக்கப்படுகிறார்.
நேற்று காலை பிரவீ்ன் குமார், நரேஷ் குப்தாவை சந்தித்துப் பேசினார். இன்று பிரவீ்ன் குமார் பதவியேற்பார் எனத் தெரிகிறது.
இவரும் நரேஷ் குப்தா போலவே நேர்மையானவர் என்று அரசுத் துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது. பிரவீன் குமார் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
1987-ம் ஆண்டில் ஐ.ஏ.எஸ். பணியில் சேர்ந்தார். 1961-ம் ஆண்டில் பிறந்த அவர், கான்பூர் ஐ.ஐ.டி.யில் உலோகவியலில் பி.டெக், எம்.டெக் பட்டம் பெற்றுள்ளார். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியலில் எம்.பில். பட்டமும் பெற்றுள்ளார். ஐ.ஏ.எஸ். தேர்வு பெற்றபின், முதலில், 1988-ல் சேலத்தில் உதவி கலெக்டராக பணியில் சேர்ந்தார். 1989-ல் தஞ்சையில் சப்-கலெக்டராகவும், 1989-ல் செட்டில்மென்ட் அதிகாரியாகவும், 1991-ல் தஞ்சை கூடுதல் கலெக்டராகவும், 1996-97-ல் விழுப்புரம் கலெக்டராகவும் பணிபுரிந்தார்.
1997-ல் தொழில்துறை கூடுதல் செயலாளராகவும், 2000-த்தில் நிதித்துறையில் கூடுதல் செயலாளராகவும் பணிபுரிந்தார் பிரவீன் குமார். பின்னர், 2001-ம் ஆண்டில் டெல்லியில் மத்திய அரசு பணிக்குச் சென்ற அவர் அங்கு கல்வித்துறை இயக்குனராகவும், கம்பெனி விவகாரத்துறையில் இயக்குனராகவும் பணிபுரிந்தார்.
2001 முதல் 2007 வரை மத்திய அரசு பணியில் இருந்த அவர், தமிழகம் திரும்பி, நிதித்துறையில் சிறப்பு செயலாளராக இருந்தார். தற்போது, நிதித்துறையில் செயலாளராக (செலவினம்) இருந்து வருகிறார்.
இவரது மனைவி அனிதா பிரவீனும் தமிழக கேடர் ஐஏஎஸ் அதிகாரிதான். பிரவீன் குமார் பணிபுரியும் நிதித்துறையிலேயே செயலாளராக (திட்டம் மற்றும் வளர்ச்சி) பணிபுரிந்து வருகிறார். இவர் 1989-ம் ஆண்டு பாட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ்












Click it and Unblock the Notifications