மாணவர் புரட்சி ஏற்படுத்தி நிச்சயமாக திமுகவை தோற்கடிப்போம்: பாஜக
தூத்துக்குடி: தூத்துக்குடியில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்ட பாரதிய ஜனதா மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வரும் சட்டமன்ற தேர்தலில் மாணவர் சக்தியைப் பயந்படுத்தி தி.மு.க.வை தோற்கடிப்போம் என்று கூறினார்.
கல்வி நிலையங்களில் இந்து மாணவர்களுக்கு சமநீதி மற்றும் சம நிதி கேட்டு தூத்துக்குடியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பா.ஜ.க. மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது,
தமிழக்த்தில் உணவு, தொழிலாளர்கள், மாணவர்கள், மகளிருக்காக போராட்டங்கள் நடந்துள்ளன. உலகில் எங்கும் இல்லாத புதுமையாய் பெரும்பான்மை குழந்தைகளை ஏமாற்றிவிட்டு சிறுபான்மையினருக்கு உதவி செய்யும் அரசை கண்டித்தே இந்த போராட்டத்தை நடத்துகிறோம்.
பா.ஜனதா கட்சி ஆட்சி நடக்கும் மாநிலங்களில் கிறிஸ்தவ, முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம், இந்து மாணவர்களையும் கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறோம்.
இது சிறுபான்மையினருக்கு எதிரான போராட்டம் அன்று. நாங்கள் எந்த சிறுபான்மையினரையும் பற்றி பேசவில்லை. கர்ம வீரர் காமராஜர் அனைத்து குழந்தைகளுக்கும் இலவசக் கல்வி முறையை அறிவித்தார். நாங்கள் அனைத்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை கொடுக்க வேண்டும் என்று கேட்கிறோம். இந்த விஷயத்தில் காமராஜர் மதவாதி என்றால் நாங்களும் மதவாதிகளே.
காங்கிரசும், தி.மு.க.வும் மத மாற்றத்துக்கு துணை போகிறது. ஒரு கோடி சிறுபான்மையினர் கல்வி திட்டத்தின் பயனை அடைகின்றனர். ஆனால் ஒரு இந்து குழந்தை கூட உதவித்தொகை பெற முடியவில்லை. இந்த நிலை தொடருமானால் ஏழை, எளிய மக்களின் குழந்தைகளுக்கு படிப்பு எட்டாக் கனியாகிவிடும்.
பா.ஜ.க. நம் குழந்தைகளின் வருங்காலம் வளமாக இருப்பதற்காக போராட்டம் நடத்துகிறது. வரும் தேர்தலில் மாணவர் புரட்சியை ஏற்படுத்தி தி.மு.க.வை தோற்கடிப்போம்.
விரைவில் பா.ஜ.க. ஆட்சி தான் அமையப் போகிறது. நாங்கள் தேர்தல் நேரத்தில் ஓட்டு கேட்டு வரும்போது குழந்தைகளின் கல்வி உதவித்தொகை என்னாயிற்று என்று கேளுங்கள். பா.ஜ.க. எந்த ஒரு சவாலையும் சந்திக்க தயாராக உள்ளது என்றார்.
-
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!











Click it and Unblock the Notifications