ஜெ. பக்கம் மக்கள் சக்தி திரண்டு வருகிறது-குண்டு கல்யாணம்
மதுரை: மக்கள் சக்தி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பக்கம் திரண்டு வந்து கொண்டிருக்கிறது. வருகிற சட்டசபைத் தேர்தலில் அதிமுகவே வெற்றி பெறும் என்று கூறியுள்ளார் நடிகரும், அதிமுக பேச்சாளருமான குண்டு கல்யாணம்.
மதுரை மாநகர் அதிமுக எம்.ஜி.ஆர். இளைஞரணி சார்பில் 108-வது பிரச்சார பொதுக்கூட்டம் மதுரை ஓபுளா படித்துறையில் நடந்தது. அதில் கலந்து கொண்டு குண்டு கல்யாணம் பேசுகையில்,
திமுக ஆட்சியில் விலைவாசி உயர்ந்து விட்டது. கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அறிவித்த எந்த திட்டத்தையும் திமுக அரசு செயல்படுத்தவில்லை. அத்தனை திட்டங்களும் போலியானது என்று மக்கள் உணர்ந்துள்ளனர்.
பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு இதுவரை திமுக அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. போராட்டம் நடத்தவில்லை. ஆனால் எதிர்க்கட்சி தலைவரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக சொல்கிறார்கள். இதனை தமிழக மக்கள் வேடிக்கையாக பார்க்கிறார்கள்.
ஜெயலலிதா பக்கம் மக்கள் சக்தி திரண்டு விட்டது. இதற்கு கோவை கூட்டமே சாட்சி ஆகும். எனவே வருகிற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக வருவார் என்றார் குண்டு கல்யாணம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications