முதலீட்டுக்கு ஏற்ற மாநிலமாக திகழ்கிறது தமிழகம்-ஸ்டாலின்
கோவை: முதலீடுகளுக்கு ஏற்ற மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
கோவையில் 19வது ஸ்டிகான் (சிறு மற்றும் குறு தொழில்துறை மாநில மாநாடு) மாநாட்டை தொடங்கி வைத்து ஸ்டாலின் பேசுகையில், தொழில் முதலீட்டுக்கு ஏற்ற மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் ரூ. 46,091 கோடி அளவுக்கு முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 37 பெரும் தொழில் நிறுவனங்கள் இந்த முதலீடுகளைச் செய்துள்ளன. 2.21 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.
உள்ளூர் தொழில்சந்தையில் சிறு மற்றும் குறு தொழில்துறையின் பங்கு 45 சதவீதமாகும். இவற்றின் மூலம் இந்தியாவிலிருந்து 40 சதவீத அளவு ஏற்றுமதி நடக்கிறது என்றார் ஸ்டாலின்.
தமிழத்தில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ள மின் கட்டண உயர்வு குறித்து ஸ்டாலின் கருத்து தெரிவிக்கையில், மின் கட்டண விகித மாற்றம் குறித்து குறு மற்றும் சிறு தொழில்துறையினர் தெரிவித்துள்ள கவலைகள் கருத்தில் கொள்ளப்படும்.
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் தமிழகத்தில் மின் கட்டண விகிதம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்பதை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications