போலி மதிப்பெண் சான்றிதழ் வழக்கு-ஏகாம்பரத்தை மிரட்டியது யார்?
சென்னை: போலி மதிப்பெண் சான்றிதழ் விவகாரத்தில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏகாம்பரத்தை சிறையில் வைத்து மிரட்டியது யார் என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தில் ரெக்கார்ட் கிளார்க் ஆக பணியாற்றி வந்தவர் ஏகாம்பரம். இவரும், ஓய்வு பெற்ற தலைமை அசிரியர் திருவேங்கடம் என்பவரும், போலி மதிப்பெண் சான்றிதழ் வழக்கில் சிக்கி கைதானார்கள். இந்த விவகாரத்தில் மேலும் பல புள்ளிகளுக்கும், பள்ளிக் கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கும் தொடர்புஇருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஏகாம்பரம் மிரட்டப்பட்டுள்ளதாக அவரது வக்கீல் புகார் கூறியுள்ளார். உண்மையை வெளியில் சொன்னாலோ, யாரையும் காட்டிக் கொடுத்தாலோ கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அவருக்கு சிறைக்குள் வைத்து மிரட்டல் விடுக்கப்பட்டதாக அவரது வக்கீல் தெரிவித்தார்.
இந்த நிலையில் ஏகாம்பரத்தை மிரட்டியது இரண்டு காவல்துறையினர் எனத் தெரிய வந்துள்ளதாம். அவர்களில் ஒருவர் போலீஸ் உயர் அதிகாரி எனவும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அந்த இருவரையும் பிடித்து விசாரிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications