விலை சரிவு-குப்பைக்கு போகும் அரளிப் பூக்கள்
சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் அரளிப் பூவிற்கு விலை இல்லாததால் குப்பையில் கொட்டும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கண்ணீர் சிந்துகின்றனர்.
தமிழகத்தில் மலர் சாகுபடி செய்வதில் மதுரை, ராமநாதபுரத்திற்கு அடுத்தபடியாக சங்கரன்கோவில் உள்ளது. சுற்று பகுதிகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் அதிகளவு மலர் சாகுபடி செய்கின்றனர்.
இங்கு பயிரிடப்பட்டுள்ள மல்லி, பிச்சி, செவ்வந்தி, ரோஜா, கனகாம்பரம், கேந்தி, சேவல், காக்கட்டான், வாடா மல்லி, அரளி உள்ளிட்ட பூக்கள் அண்டை மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுவதுடன் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஏராளமான விவசாயிகள் அரளிப் பூ பயிரிட்டுள்ளனர். வாரத்தில் இரண்டு தினங்கள் மற்றும் பவுர்ணமி தினங்களில் ஒரு கிலோ ரூ.100 முதல் 150 வரை விலை போகும். மற்ற தினங்களி்ல் ரூ.20 முதல் 30 வரை விற்கப்படும். ஆனால் கடந்த சில மாதங்களாக அரளிப் பூ விலை கடும் சரிவை சந்தித்து வருகிறது. ரூ.5க்கு கூட எவரும் அரளிப் பூவை வாங்க வரவி்ல்லை.
சங்கரன்கோவிலில் உள்ள பூ கமிஷன் கடைகளுக்கு கொண்டு வரப்படும் அரளிப் பூக்கள் விற்பனையாகாமல் கோவில் கீழமாடவீதியில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இதனால் அரளிப் பூ சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications