மின் கட்டண உயர்வால் மக்கள் பாதிக்கப்படுவர்-வீடுவாடகை உயரும் அபாயம்: ஜெ.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
மின்சாரம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், ஆலைகளில் தயாரிக்கப்படும் பொருட்களின் விலை உயரும். கல்வி நிறுவனங்களுக்கும் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதால், மாணவர்களின் கல்விக் கட்டணமும் உயர வாய்ப்பு உள்ளது.
நகரங்களில் வாடகை வீடுகளில் குடியிருக்கும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மின்சார கட்டண உயர்வால் பாதிக்கப்படுவார்கள். மொத்தத்தில் இந்த மின்சார கட்டண உயர்வு, மேலும் விலைவாசியை உயர வழி வகுத்துள்ளது.
ஏற்கனவே நகர்ப்புற ஏழை மக்கள் கடுமையான விலைவாசி உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஆகியவற்றால் பெரும் சுமையை சுமக்கும் நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தற்போதைய மின் கட்டண உயர்வு அவர்களை மேலும் கடுமையாக பாதிக்கும்.
எனவே மின்கட்டண கூடுதல் சுமையை அரசு அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அவர்தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications