காமன்வெல்த் போட்டி நிதி முறைகேடு புகார்-விசாரணைக்கு கல்மாடி உத்தரவு

டெல்லி காமன்வெல்த் போட்டியால் இந்தியாவுக்கு சர்வதேச அரங்கில் பெரும் அவப்பெயர் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. பெருமளவில் நிதி முறைகேடுகள் நடந்திருப்பதாக சரமாரியாக புகார்கள் எழுந்துள்ளன. மேலும் பல லட்சம் பணத்தை தேவையில்லாமல் செலவு செய்து வீணடித்துக் கொண்டிருப்பதாகவும் சர்ச்சை கிளம்பியுள்ளது.
இந்த நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஏஎம் கார்ஸ் அன்ட் வேன்ஸ் என்ற நிறுவனத்திற்கு பெருமளவில் பணம் கொடுக்கப்பட்ட விவகாரம் பெரும் பூசலைக் கிளப்பியுள்ளது. இதைத் தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்த நான்கு பேர் கொண்ட கமிட்டியை ஒருங்கிணைப்புக் குழு அமைத்துள்ளது.
அதற்கு முன்பாக இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவரும், ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சுரேஷ் கல்மாடி, மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பின்போது, லண்டன் இந்திய தூதரகத்திலிருந்து தனக்கு வந்த இமெயில்களின் நகல்களை அவர் கிருஷ்ணாவிடம் அளித்தார். ஆனால் இந்த மெயில்களை எஸ்.எம்.கிருஷ்ணா ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து நிதி முறைகேடுகள் குறித்து 3 பேர் கொண்ட கமிட்டி விசாரிக்கும் என கல்மாடி அறிவித்தார்.












Click it and Unblock the Notifications