ஜெ. ஆட்சி மின் கட்டண உயர்வுகள்-நினைவூட்டும் ஆற்காடு

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மின் கட்டண உயர்வு குறித்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிக்கை ஒன்று வெளியிட்டிருக்கிறார். அதில் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.
திமுக ஆட்சிக்கு வந்து ஐந்தாவது ஆண்டில்தான் மின் கட்டணத்தை ஓரளவிற்கு உயர்த்தி இருக்கிறது.
ஆனால் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் 2001ல் அந்த ஆண்டே மின் கட்டணத்தை உயர்த்தினார். 2003ல் ஜெயலலிதா மின்சார கட்டணத்தை மீண்டும் உயர்த்தினார்.
அப்படி உயர்த்தும்போதெல்லாம் மாதம் 100 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கும், ஒவ்வொரு முறையும் மின் கட்டணத்தை உயர்த்தினார்.
மாதம் 200 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கும், மின் கட்டணத்தை உயர்த்தினார். ஊராட்சி மன்றங்களுக்கு, கைத்தறி நெசவாளர்களுக்கு, சிறு தொழில்களுக்கு எல்லாம் கட்டணத்தை உயர்த்தியவர் தான் இந்த ஜெயலலிதா.
திமுக ஆட்சியில் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம், ஜெயலலிதா உயர்த்தியதை போல் உயர்த்தாமல் வீட்டிற்கு மாதம் 300 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரத்தை உபயோகிப்பவர்களுக்கு மட்டும் மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
அதோடு உள்ளாட்சி மன்றங்கள், தெரு விளக்குகள், குடிநீர்த் தேக்க தொட்டிகள், குடிசைவாசிகள், விசைத்தறி- கைத்தறி நெசவாளர்கள், பொது வழிபாட்டு இடங்கள், வேளாண் மின் நுகர்வோர், சிறு தொழில் புரிவோர் இவர்களுக்கு எல்லாம் மின் கட்டணத்தை உயர்த்தவில்லை.
அதுமட்டுமல்லாமல் சிறு வியாபாரிகள், இரு மாதத்திற்கு ஒரு முறை 100 யூனிட்டுகளுக்கு குறைவாக மின்சாரம் உபயோகப்படுத்தி இருப்பார்களேயானால் அவர்களுக்கு ஏற்கனவே இருந்த மின் கட்டணத்தில் யூனிட்டுகளுக்கு ஒரு ரூபாய் குறைக்கப்பட்டிருக்கிறது.
இதைப்போலவே வீட்டிற்கு மாதம் 100 யூனிட்டுகளுக்கு மேல் உபயோகப்படுத்துபவர்களுக்கும், 200 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்துபவர்களுக்கும் ஜெயலலிதா ஆட்சியில் உயர்த்தியதை போல திமுக ஆட்சியில் உயர்த்தவில்லை.
உண்மை இப்படி இருக்கும்போது ஜெயலலிதா எந்த முகத்தை வைத்துக்கொண்டு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்ப பெற வேண்டுமென்று சொல்கிறார்?.
மக்களுக்கு மறதி குறைவு, ஆகவே அதிமுக ஆட்சியில் இரண்டு முறை உயர்த்திய மின் கட்டணத்தை பற்றி மக்கள் மறந்திருப்பார்கள் என்று ஜெயலலிதா நினைக்கக்கூடும்.
ஜெயலலிதா ஆட்சியில் என்னவெல்லாம் நடந்தது என்பதை பற்றி மக்கள் நன்றாகவே நினைவில் வைத்திருக்கிறார்கள். ஆகவே மக்கள் காதில் பூசுற்ற முயற்சிக்க வேண்டாம் என்று கூறியுள்ளார் வீராசாமி.












Click it and Unblock the Notifications