ஒரு தலைக் காதலால் புதுக்கோட்டை கல்லூரி மாணவி கொலை
பேராவூரணி: ஒரு தலைக் காதலில் கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகேயுள்ள பெருமகளூர் கே.ஆர்.புரத்தை சேர்ந்தவர் அடைக்கலம். இவரது மகள் வனிதா (18). இவர் புதுக்கோட்டை அரசு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.
இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் கண்ணதாசன்(21). இவர் ஆலங்குடியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் மூன்றாமாண்டு படித்து வருகிறார்.
வனிதாவும், கண்ணதாசனும் கல்லூரிக்கு பேருந்தில் சென்று வந்துள்ளனர். வனிதா செல்லும், அதே பேருந்தில் தான் கண்ணதாசனும் பயணம் செய்து வந்துள்ளார். வனிதாவின் மீது கண்ணதாசனுக்கு ஒருதலைக் காதல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டுக்கு அருகே உள்ள வயலில் உளுந்து செடி பறிக்க வனிதா சென்றுள்ளார். அவரை பின்தொடர்ந்து வந்த கண்ணதாசன் திடீரென அவரை வழிமறித்திருக்கிறார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏறட்டது.
இதையடுத்து ஆத்திரமடைந்த கண்ணதாசன், வனிதாவை வாய்க்காலுக்குள் இழுத்து சென்று கழுத்தை துணியால் இறுக்கி கொலை செய்தார். அதன் பிறகு வனிதாவின் உடல் மற்றும் முகத்தில் திராவகத்தை ஊற்றி விட்டு கண்ணதாசன் தப்பிச் சென்றுவிட்டார்.
வயலுக்குப் போன மகள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் கலக்கமுற்றனர். இதையடுத்து அக்கம், பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இந்நிலையில் நேற்று காலை வனிதா அருகேயுள்ள ஒடையில் சடலமாக கிடப்பது தெரிய வந்தது. அந்த இடத்திற்கு அலறியடித்துக் கொண்டு சென்ற அவரது பெற்றோரும், உறவினர்களும் வனிதாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு தீவிர விசாரணை நடத்தி, கைரேகை நிபுணர்களை வரவழைத்து ரேகைகளை பதிவு செய்தனர்.
இதற்கிடையே வனிதாவை இரக்கமின்றி கொன்ற கண்ணதாசன், தன் குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார். இது குறித்து பேராவூரணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications