காங்கிரஸ் டிஜி்ட்டல் போர்டால் பதற்றம்: போலீசார் சமரசம்
திசையன்விளை: திசையன்விளை அருகே பஞ்சாயத்தை எதிர்த்து காங்கிரசார் வைத்துள்ள டிஜிட்டல் போர்டால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
திசையன்விளை அருகே உள்ளது நவ்வலடி பஞ்சாயத்து. இப்பஞ்சாயத்தை எதிர்த்து இளைஞர் காங்கிரசார் அங்குள்ள மெயின் ரோட்டில் டிஜி்ட்டல் போர்ட் வைத்துள்ளனர். அதில் பஞ்சாயத்தில் வழங்கப்பட்ட 729 இலவச காஸ் இணைப்புகளுக்கு ரூ.100 வீதம் மொத்தம் 58 ஆயிரம் வசூல் செய்ததாகவு்ம், புதிய குடிநீர் இணைப்பை பொதுமக்களுக்கு வழங்காமல் தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதாகவும், மக்கள் நல பணியாளர்கள் மற்றும் பஞ்சாயத்து எழுத்தர் பணிகளுக்கு உள்ளூர் இளைஞர்களை நியமிக்காமல் வெளியூர் நபர்களை நியமித்ததாகவும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், டிஜிட்டல் போர்டை உடனடியாக அப்புறப்படுத்தக் கோரியும் ஆண்களும், பெண்களும் சுமார் 100 பேர் நேற்று காலை நவ்வலடி மெயின் ரோட்டில் திரண்டனர்.
இதேபோல் டிஜிட்டல் போர்டை அகற்றக் கூடாது என்பதை வலியுறுத்தி இளைஞர் காங்கிரசாரும் அங்கு திரண்டனர். இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. உவரி சப்-இன்ஸ்பெக்டர் வனிதா தலைமையில் போலீசார் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications