தமிழகத்தில் ரூ. 13,000 முதலீட்டில் 3 புதிய தொழிற்சாலைகள்: 8,600 பேருக்கு வேலை

இதற்கான ஒப்பந்தங்கள் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் இன்று கையெழுத்தாயின. இவற்றின் மூலம் 8,600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் எரிவாயு தேவைகளை நிறைவு செய்வதற்காக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனமும் இந்தியன் ஆயில் நிறுவனமும் இணைந்து எண்ணூர் துறைமுகத்திற்கு அருகே காட்டுப் பள்ளி கிராமத்தில் ஆண்டுக்கு 5 மில்லியன் டன்கள் கையாளும் திரவநிலை எரிவாயு முனையத்தை அமைக்கவுள்ளன.
அதிலிருந்து 20 மில்லியன் கன மீட்டர் எரிவாயுவை குழாய்கள் மூலம் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கும், உர தொழிற்சாலைகளுக்கும் பிற தொழிற்சாலைகளுக்கும், போக்குவரத்து மற்றும் நகர்ப்புற எரிவாயு தேவைகளுக்கும் விநியோகிக்கவுள்ளன.
இதற்காக ரூ. 10,000 கோடி முதலீட்டில் புதிய தொழில் நிறுவனத்தை அமைப்பதோடு, அதன் இன்னொரு பகுதியாக மின் உற்பத்தி நிலையம் ஒன்றையும் அமைக்கவுள்ளன.
இதில் சுமார் 7,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
இந்த நிறுவனம் மற்றும் மின் நிலையம் அமைப்பது தொடர்பான ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் கையெழுத்தானது. அதில் தமிழக அரசின் டிட்கோ நிறுவனம் சார்பில் அதன் தலைவர் ராஜீவ் ரஞ்சன், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சார்பில் அதன் தலைவர் மற்றும் இயக்குனர் பி.எம்.பன்சல் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
மானாமதுரையில் வீடியோகான் தொழிற்சாலை:
அதேபோல வீடியோகான் நிறுவனம் ரூ.1,500 கோடி முதலீட்டில் எல்சிடி பிளாஸ்மா தொலைக்காட்சி உள்ளிட்ட பல வகையான மின்னணு பொருட்களையும், வீட்டு உபயோகப் பொருட்களையும், அவற்றுக்குரிய உதிரி பாகங்களையும் தயாரிக்கும் புதிய தொழிற்சாலையை மானாமதுரை சிப்காட் தொழிற்சாலை பூங்காவில் அமைக்க உள்ளது.
இதில் 1,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தில் தொழில் துறை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், வீடியோகான் நிறுவனத்தின் இயக்குனர் பிரதீப் குமார் என்.தூத் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
ஸ்ரீபெரும்புதூரில் ஜே.கே.டயர்ஸ் ஆலை:
டயர் உற்பத்தியில் உலகில் 22வது இடத்தில் உள்ள ஜே.கே. டயர்ஸ் நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ஜே.கே.டயர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் எனும் புதிய தொழிற்சாலையை அமைக்கிறது.
ரூ.1,500 கோடி முதலீட்டிலான இந்தத் தொழிற்சாலை மூலம் சுமார் 600 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இதற்கான ஒப்பந்தத்தில் தமிழக அரசின் சார்பில் ராஜீவ் ரஞ்சன், ஜே.கே.டயர்ஸ் சார்பில் அதன் தலைவர் மற்றும் இயக்குனர் அருண் கே.பஜோரியா ஆகியோர் கையெழுத்திட்டனர்.
அப்போது துணை முதல்வர் ஸ்டாலின், தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, சிப்காட் நிறுவன தலைவர் நிரஞ்சன் மார்டி, தமிழ்நாடு தொழில் வழிகாட்டி அமைப்பின் செயல் துணைத் தலைவர் எம்.வேல்முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த 3 தொழிற்சாலைகள் மூலம் சுமார் 8,600 புதிய வேலை வாய்ப்புகள் உருவாகவுள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications