கரூர் அருகே தலையில் தேங்காய் உடைக்கும் திருவிழா: கோலாகலக் கொண்டாட்டம்
கரூர் மாவட்டம் மேட்டு மகாதானபுரத்தில் அருள்மிகு மகாலட்சுமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஆடி 18 - க்கு அடுத்த நாளில் தலையில் தேங்காய் உடைக்கும் திருவிழா வெகு விமர்சியாக கொண்டாடப்படும்.
இந்த திருவிழாவிற்கு பெங்களூர், திருவனந்தபுரம், டெல்லி போன்ற பல்வேறு பெரு நகரங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்தனர்.
அவர்கள் கடந்த 18 நாட்களாக கடும் விரதம் இருந்து, கோவிலில் தலையில் தேங்காய் உடைத்துக் கொள்ள விருப்பம் தெரிவித்து வரிசையில் அமர்ந்திருந்தனர்.
அப்போது கோவில் பூசாரிக்கு அருள் வரவே அவர் கோவிலை மூன்று முறை வலம் வந்த பின்பு வரிசையாக உட்கார்ந்திருந்தவர்கள் தலையில் தேங்காயை டமார் என்று உடைத்து தள்ளினார். இது போன்று சுமார் 460 பேர் தலையில் தேங்காய் உடைத்துக் கொண்டனர்.
இதில் ஒரு சிலருக்கு மண்டையில் ரத்தம் பீறிட்டு வந்தது. சிலருக்கு சிறிய அளவிலான காயம் ஏற்பட்டது.
தலையில் தேங்காய் உடைப்பது குறித்து பெங்களூரில் இருந்து வந்த ராஜூ என்பவரிடம் கேட்ட போது,
எங்களுக்கு பூர்வீகம் தமிழகம் தான். பெங்களூரில் பிஸினஸ் பார்த்து வருகின்றோம். அதனால் குடும்பத்தோடு அங்கு உள்ளோம். இந்த திருவிழாவிற்கு நாங்கள் குடும்பத்தோடு வந்து தலையில் தேங்காய் உடைத்து சாமி கும்பிட்டு செல்வது வழக்கம்.
இப்படி செய்தால் எங்களது வீட்டிற்கு சாமி வருகை தந்து ஐஸ்வரியங்களை அள்ளித்தரும் என்பது ஐதீகம் என்று அவர் கூறினார்.
இந்த திருவிழாவை முன்னிட்டு குளித்தலை டி.எஸ்.பி. மனோகரன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும், அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications