196 ஏட்டுகள் எஸ்ஐக்களாக பதவி உயர்வு : விரைவில் நியமன உத்தரவு
புளியங்குடி: நெல்லை மாவட்டத்தில் 196 ஏட்டுகள் இன்னும் சில தினங்களில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெருகின்றனர்.
தமிழகம் முழுவதும் சில மாதங்களுக்கு முன் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏட்டுகள் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றனர். இவர்கள் அனைவரும் அந்தந்த காவல் நிலையங்களிலும், சிலர் அருகில் உள்ள மற்ற காவல் நிலையங்களிலும் பணியாற்றி வருகின்றனர்.
அதன்படி ஒவ்வொரு காவல் நிலையத்திலும் 3 முதல் 5 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளனர். நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை 250க்கும் மேற்பட்ட ஏட்டுகள் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றனர்.
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக நியமனம் செய்யப்படுவதற்கு 25 ஆண்டுகள் போலீஸ் மற்றும் ஏட்டாக பணிபுரிந்திருப்பதுடன் எவ்வித குற்றச்சாட்டுக்கும ஆளாகாமல் இருக்க வேண்டும். தற்போது நெல்லை மாவட்டத்தில் உள்ள 68 காவல் நிலையங்களில் 170 ஏட்டுகளும், ஆயுதப்படையில் 26 ஏட்டுகளும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற உள்ளனர்.
அதன்படி இன்னும் ஒருவாரத்தில் அநேகமாக ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் அனைவருக்கும் பதவி உயர்வுக்கான உத்தரவு வழங்கப்பட உள்ளது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றும் போலீஸ்காரர்களின் எண்ணிக்கையை விட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications