கொடநாடு எஸ்டேட்: ஆய்வு நடத்த வந்த அதிகாரிகளை தடுத்த அதிமுகவினர்-வழக்குப் பதிவு

கொடநாடு எஸ்டேட் வளாகத்திற்குள் ஜெயலலிதா தேயிலை தொழிற்சாலை கட்டி வருவதாகவும், இதற்கு உரிய அனுமதியைப் பெறவில்லை என்றும், மேலும் எஸ்டேட் வளாகத்திற்குள் அனுமதியின்றி ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து விசாரணை நடத்த தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் உதயசந்திரனை விசாரணை அதிகாரியாக நியமித்து இதுகுறித்த விபர அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து உதயசந்திரன் உதகமண்டலத்துக்கு வந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டுச் சென்றார்.
இந்நிலையில் இந்த எஸ்டேட்டை ஆய்வு செய்ய நீலகிரி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. ஆய்வு செய்வதற்கான அனுமதியை எஸ்டேட் நிர்வாகத்திடம் கேட்டு பெறுவதற்காக, கோட்டாச்சியர் ராஜு, கொடநாடு ஊராட்சி மன்ற தலைவர் பொன்தோஸ் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் இன்று தேயிலை தொழிற்சாலைக்கு நேரில் சென்றனர்.
இவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க சேலம், ஈரோடு, நாமக்கல், கோவை, நீலகிரி மாவட்டங்களிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் கொடநாடு எஸ்டேட் பகுதியில் குவிக்கப்பட்டனர்.
ஆனால், அங்கிருந்த ஏராளமான அதிமுகவினர், அதிகாரிகளை உள்ளே நுழைய விடாமல் தடுத்ததுடன், தாக்குதலுக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது.
இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு நடத்தாமலேயே திரும்பிச் சென்றனர்.
அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்த முன்னாள் அமைச்சரும், நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளருமான மில்லன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜெ. ஆர்ப்பாட்டத்துக்கு பூமி பூஜை:
இதற்கிடையே திருச்சியில் வரும் 14ம் தேதி அதிமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. ஜெயலலிதாவின் தலைமையில் நடைபெறும் கூட்டம் என்பதால் மிகப்பிரண்டமாக கூட்டத்தை கூட்ட அதிமுக பெரும் முயற்சிகள் எடுத்து வருகிறது.
இதற்காக திருச்சி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டிணம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அதிமுக நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் கட்சியின் பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம்.
ஒரு லட்சம் பேரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வைக்க வேண்டும் என்று அவர்களிடம் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இந்நிலையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு திருச்சி பொன்மலையில் உள்ள ரயில்வே கார்னர் மைதானத்தை தேர்வு செய்து, அதற்கான அனுமதியை நேற்று ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜியிடம் வாங்கியுள்ளது அதிமுக தரப்பு.
இதையடுத்து இன்று காலை அந்த மைதானத்தில், சிறப்பு பூமி பூஜை நடைபெற்றது. பின்னர் திருவாணைக்காவலில் உள்ள அகிலாண்டேஸ்வரி கோவிலில் சிறப்பு பூஜையும் நடைபெற்றது.
இதில் கட்சியின் பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், திருச்சி மாநகர அதிமுக செயலாளர் மனோகர், ஜெயலலிதா பேரவை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications